Tirunelveli

News October 18, 2024

பருவ மழை: சிறப்பு செயற்பொறியாளர் நியமனம்

image

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அவசர பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத்துறை சிறப்பு பொறுப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படிநெல்லை மாவட்டத்திற்கு நீர்வளத்துறை திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் மகேஸ்வரி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

News October 18, 2024

இறுதி ஊர்வலத்தில் தகராறு; 3 பேருக்கு வெட்டு

image

பாளையங்கோட்டை அருகே மூளி குளத்தில் இறுதி ஊர்வலத்தில் வந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் சுப்புராஜ், ராஜேஷ், கௌதம் ஆகிய மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த 3 பேரும் பாளை., அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு : ஏற்பட்டுள்ளது.

News October 18, 2024

பல் பிடுங்கிய பல்வீர்சிங் வழக்கு ஒத்திவைப்பு

image

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பணியாற்றியவர் பல்வீர் சிங். இவர் அங்கு விசாரணைக்கு வந்த, விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று(அக்.,17) விசாரணைக்கு வந்தபோது, பல்வீர்சிங் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News October 17, 2024

தோட்டக்கலை பயிர்: நெல்லை கலெக்டர் வேண்டுகோள்

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழையின்போது தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை உரிய நடைமுறையில் பாதுகாக்க வேண்டும். எடையை குறைக்க கிளைகளை கவர்ச்சி செய்ய வேண்டும். செடிகள் காற்றில் பாதிக்காதபடி தாங்கு குச்சிகளை வைத்து கட்ட வேண்டும். காய்கறி பயிர்கள் அதிக நீர் தேங்கா வண்ணம் வடிகால் வசதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தினமும் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(அக்.,17) துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ் தலைமையில் காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவிக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News October 17, 2024

மேலப்பாளையத்தில் தொடர் விபத்து! மக்கள் புகார்

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இன்று(அக்.,17) லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்‌. மேலும் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர்‌.

News October 17, 2024

தொழில் பூங்கா: நெல்லை கலெக்டர் முக்கிய தகவல்

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50% or ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவோ அது அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இது குறித்த கூட்டம் 21ஆம் தேதி பிற்பகல் 5:30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

வள்ளியூரில் முன்னாள் MP தலைமையில் கொண்டாட்டம்

image

அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு வள்ளியூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லாசர், வள்ளியூர் பேரூர் கழக செயலாளர் பொன்னரசு உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

News October 17, 2024

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா தொடக்கம்

image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளை மாத பிறப்பு முன்னிட்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று(அக்.16) சுவாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ள சப்பரத்தில் உலா வந்த காந்திமதி அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.

News October 17, 2024

நெல்லை: தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு 

image

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இதற்கான பரிந்துரையை தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!