India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பகல் நேர ரயில்களை கொல்லம் வரை நீட்டிக்க வேண்டும் என நெல்லை, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் விரும்புகின்றனர். இவ்வாறு இயக்கப்படுவதால் மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். அடுத்த மாதம் ராமேஸ்வரம் வரும் பிரதமர் இதனை அறிவிக்க வேண்டும் ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்து முத்தாலங்குறிச்சி காமராஜ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும், ஒரு சொட்டு கழிவு நீர் கூட கலக்கக்கூடாது, இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
களக்காடு அருகே உள்ள வடக்கு அப்பர் குளத்தை சேர்ந்த விவசாயி முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த நெல்லை MP ராபர்ட் புரூஸ் நேற்று அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து விவசாயிகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்தித்து பேசி நிரந்தர தீர்வு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உலகளவில் நடைபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு இடையிலான தடகள போட்டியில் நெல்லை தீயணைப்பு வீரர் மாரியப்பன் தங்கம் வென்றுள்ளார். அவர் இன்று ரயில் மூலம் நெல்லைக்கு திரும்பிய நிலையில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பழக்கூடை வழங்கி வீரரை வரவேற்றார். இதில் தீயணைப்பு வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நெல்லை அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 18ம் தேதியன்று 9 & 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களது புத்தகப் பையில் ஆயுதங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பு மாணவர்களும் அரிவாள், இரும்பு ராடுகளை கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகம் ஒரு மாணவரை டிஸ்மில் செய்து 3 மாணவர்களை அக்.,3 வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று(செப்.24) பேச்சுப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பதற்கு தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.
பாளை செஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான 7வது ஒரு நாள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வைத்து அடுத்த மாதம் 2ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 7 வயது 9, 11, 13, 15, 17 ஆகிய வயதுக்குட்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளலாம் என பாளை செஸ் கிளப் செயலாளர் ஸ்கேனி தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து விபரம் அறிய 94433-86751 என்ற நம்பரில் அணுகலாம்.
கடந்த 2014ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காவல் நிலைய சரகம் உடைப்பன்குளத்தில் ஜாதி மோதல் நடந்து மூன்று பேர் கொலையான எஸ்சி எஸ்டி வன்கொடுமை PCR வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் தண்டனை விபரங்கள் வருகின்ற 26ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால் தாமிரபரணி, கூவமாக மாறிவிடும் எனவும் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம் பொதுப்பணித்துறையின் நெல்லை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர், 26ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் இந்திய அளவிலான தால் சைனிக் முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இம்முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் சண்முகம் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். “ஸ்னாப் டீம்” பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மாணவனுக்கு பாராட்டுகள் குவிகிறது.
Sorry, no posts matched your criteria.