India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி வாரத்தில் கோவை – நெல்லை இடையே வரும் ரயிலில் முன்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. தொழில் நகரமான கோவை, திருப்பூர் பகுதியில் பணி செய்யும் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் நலன் கருதி தீபாவளிக்காக கரூர்- மதுரை- ராஜபாளையம்- தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில் கோவையில் இருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(அக்.,20) வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 1ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மும்பையில் வசிக்கும் தமிழர்கள் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வருவதற்காக தீபாவளி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அங்கிருந்து நெல்லை வரும் வழக்கமான ரயில்களில் 3 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு நிறைவு பெற்று விட்டது. இதுபோல் தீபாவளி முடிந்து திரும்பி செல்லவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் பள்ளிக்கோட்டையை சேர்ந்த நில புரோக்கர் செல்லத்துரை வீட்டின் முன் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் திரண்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து மானூர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விசாரணையில், ஒருவர் குண்டு வீசிவிட்டு தப்பியது தெரிந்தது. இது தொடர்பாக 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று (அக்.20) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அட்டவணை வெளியிட்டுள்ளனர். அதில் நெல்லை மாநகரத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் இரவு ரோந்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவிக்கு இவர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 24ம் தேதி இரவு 11.25க்கு புறப்படவுள்ள 16729 மதுரை – புனலூர் விரைவு ரயில், மதுரை – திருநெல்வேலி இடையே மட்டுமே இயங்கும். இந்த ரயில் திருநெல்வேலி – புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. புனலூர் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 24ம் தேதி மாலை 5.15க்கு புறப்பட வேண்டிய 16730 ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய காவல்துறையினர், தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு தொலைதூர ரயில்களில் பயணிகளிடம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். நிலையத்தில் இருந்து தினமும் புறப்பட்டு செல்லும் ரயில்களில் பட்டாசு எடுத்து செல்கிறார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை செய்கின்றனர். இன்றும் இப்பணி தொடரும் என தெரிவித்தனர்.
சமூக வலைத்தளத்தில் தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவர் கண்ணபிரான் கைது தொடர்பாக சிலர் தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். யூடியூப்பில் ஒருவர் குறிப்பிட்ட நபருக்கும் கண்ணபிரானுக்கும் இடையே உள்ள பகையை குறிப்பிட்டுள்ளார்.இது உண்மைக்கு புறம்பான தவறான கருத்து ஆகும்.
நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு நேற்று முன்தினம்(அக்.,18) வண்ணார்பேட்டையில் ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு, GRT ஹோட்டல் அருகே சென்றபோது மேயர், துணை மேயர் கார்கள் அந்த காரை பின் தொடர்ந்தன. அப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பிரேக் பிடித்ததில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் மேயர், துணை மேயர் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் நேற்று(அக்.19 ) இரவு சில இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று(அக்.20) நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா நேற்று(அக்.19) இரவு விடுத்துள்ள வானிலை பதிவு தெரிவித்துள்ளார். எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை நாளைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.