India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இன்று(செப்.30) தனது ட்விட்டரில் “ஏன் என்ற கேள்வி எழும்பும் இடத்தில்தான் பகுத்தறிவு பிறக்கிறது என்று பாடம் நடத்திய அண்ணாவால் தொடங்கப்பட்ட இயக்கம் திமுக. அந்த இயக்கம் இன்று உதயநிதிக்கு பத்துப்பாட்டு பாடி எட்டு தொகையை கேட்டு பெற்று பதினெண்கீழ்க்கணக்கில் காலம் தள்ளும் நாக்கு பூச்சிகளின் கூடாரமாகிவிட்டது என பதிவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் உள்பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலை கொண்டுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்.,1ம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பள்ளிகளுக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,. கல்வித்துறை வழிகாட்டி நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், கூரைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பாரதி நகர் வெற்றி விநாயகர் கோயிலில் சிவனேரி மணிவாசகர் அருட்பணி மன்றம் சார்பில் 2500 ஆவது திருவாசக முற்றோதல் வேள்வி நேற்று(செப்.,29) நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவ பிரகார தேசிய சத்திய ஞான பரமச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து வேள்வியை நடத்தினார். திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
நெல்லைக்கு இன்று(செப்.29) வருகை புரிந்த மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் தலைமையில் பாளையங்கோட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வாரிய தலைவர் விஜிலா, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தேவிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தமிழக அரசுக்கு இன்று(செப்.29) கோரிக்கை வலியுறுத்திய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வக்பு சொத்துக்களை அபகரிப்பு செய்யும்படி அப்பாவி மக்களை தூண்டும் இந்து முன்னணி உள்ளிட்ட வகுப்புவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வக்பு சொத்துக்களின் பட்டியலை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் இருந்தபோது சிறைகாவலர்களை தாக்க முயன்றதாக பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் மணி ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து மணியை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், கடந்த 27ம் தேதி மூனாறில் துப்பாக்கி முனையில் கைது செய்து இன்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் நாளை (செப்.30) காலை 10.15 மணிக்கு கூட்ட அரங்கில் நடைபெறும் என மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். துணை மேயர் ராஜி மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தொடர்ந்து சிறப்பு கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்டு நேற்று(செப்.28) ஊர் பகுதிகளில் மழை பெய்து உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் பிரதான அணையாக உள்ள பாபநாசம் காரையாறு அணைக்கு இன்றைய காலை நிலவரப்படி வினாடிக்கு நீர்வரத்தானது 148 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து 29 கன அடியாக சரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் நேற்று(செப்.28) காலை முதல் வெயில் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 17 மில்லி மீட்டர் , களக்காட்டில் 27.2 மில்லி மீட்டர் , மூலக்கரைப்பட்டியில் 5 மில்லி மீட்டர் ராதாபுரத்தில் 4 மில்லி மீட்டர் நாங்குநேரியில் 2 மில்லி மீட்டர் அம்பையில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று(செப்.29) மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.