Tirunelveli

News November 4, 2024

நெல்லையில் நாளை பேரிடர் ஒத்திகை பயிற்சி: கலெக்டர் தகவல்

image

நெல்லையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதை எதிர்கொள்ள பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மக்களை மீட்பது தொடர்பாக ஒத்திகை பயிற்சி நாளை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காவல் துறை மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோர்களால் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

News November 4, 2024

ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஒரு வருட பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர், இடைநிலை மேலாண்மைக் கணக்காளர் ஆகிய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோவில் ஒரு வருடத்திற்கான பயிற்சி இலவசமாக வழங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இன்று (நவ.4) கேட்டுக்கொள்ளப்பட்டது.

News November 4, 2024

வயநாட்டில் வாக்கு சேகரித்த நெல்லை MP

image

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேற்று (நவ.3) கேரள மாநிலம் வயநாடு மலப்புரம் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பட்டா பகுதியில் அமைந்துள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் ஞாயிறு வழிபாட்டுக்காக வந்திருந்த ஆயர் பெருமக்கள் மற்றும் இறை மக்களிடம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.

News November 4, 2024

சபாநாயகரை வரவேற்ற சிங்கப்பூர் திமுக அயலக அணி

image

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நடைபெறும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் சென்றடைந்த தமிழக சபாநாயகர் அப்பாவுக்கு, அங்குள்ள திமுக அயலக அணி நிர்வாகிகள் நேற்று (நவ.3) உற்சாக வரவேற்பு அளித்தனர். தமக்கு அளித்த அன்பான வரவேற்புக்கு அயலக அணி நிர்வாகிகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

News November 4, 2024

திருநெல்வேலி மாவட்ட மகளிர் ஹாக்கி அணி தேர்வு

image

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் 9.11.2024 முதல் 11.11.2024 வரை பாளையங்கோட்டையில் பெண்களுக்கான சப்ஜூனியர் மாநில சேம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்கு திருநெல்வேலி மாவட்ட அணிக்கான தேர்வு 5.11.2024 அன்று காலை 8.30 மணி முதல் சாராள்டக்கர் கல்லூரியின் ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. 1.1.2008 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்த ஹாக்கி வீராங்கனைகள் பங்கேற்கலாம்.

News November 4, 2024

செந்தூர் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

image

திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்டங்களை பொருத்தவரை திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நாளை 5ஆம் தேதி இரவு 8:25 மணிக்கு சென்னைக்கு புறப்படுவதற்கு பதிலாக 10:35 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதாவது 2 மணி நேரம் தாமதமாக கிளம்பி செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News November 3, 2024

பிரியங்கா காந்தியுடன் நெல்லை எம்பி சந்திப்பு

image

கேரள மாநிலம் வயநாட்டில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று அங்கு நெல்லை மக்களவைத் தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ், பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தியை சந்தித்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

News November 3, 2024

அமைச்சர் கேஎன். நேரு நெல்லை வந்தார்

image

தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சரும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு இன்று நெல்லைக்கு வருகை தந்துள்ளார். அவரை மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது

News November 3, 2024

மாவட்டம் முழுவதும் 75 மில்லி மீட்டர் மழை பதிவு

image

இன்று (நவ.3) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 75 மில்லி மீட்டர் அதாவது 7.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ராதாபுரத்தில் 22 மில்லி மீட்டர், நம்பியாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 8.2 மில்லி மீட்டர், கொடுமுடிஆறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

News November 3, 2024

ராகுல் காந்தியுடன் நெல்லை எம்பி சந்திப்பு

image

கேரளா மாநிலம் வயநாட்டில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இன்று (நவ.,5) வயநாடு சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  தொடர்ந்து ராகுல் காந்தி இன்று நடத்திய பிரச்சாரத்திலும் நெல்லை எம்பி கலந்து கொண்டார்.

error: Content is protected !!