India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 20-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்தும்,பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி, ஆகிய உலோக தரம் அறிதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லையில் காதலர்கள் எல்லை மீறிய செயல்களில் பொது இடங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறையும் மாநகர காவல் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் வெளி மாவட்டம் செல்கிரது. டெப்போக்களுக்கு புதிதாக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் மிஷின்கள் வந்ததுள்ளது. அதை பயன்படுத்துவதற்கு கண்டக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அனைத்து பஸ்களிலும் இது பயன்பாட்டில் வர உள்ளது. பொது மக்கள் தங்கள் பணத்தை வீட்டில் மறந்து வைத்து வந்தால் கூட அலைபேசி செயலிகளை பயன்படுத்தி பயணிக்கலாம்.

திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த டி.பி.எம் மைதீன் கான் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார். திமுக பொது செயலாளர் துரை முருகன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப்பிற்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு குழந்தையின் உறவினர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று நீதி கேட்டு உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடப்பதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆன்லைன் டிரேடிங் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 50 முதல் 60 சதவீதம் லாபம் என்று கூறி ஆசை வார்த்தைகள் பேசி சைபர் கிரைம் கொள்ளையர்கள் மோசடி செய்வதற்கு முயற்சிக்கின்றனர். அதை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையில் துணை கலெக்டர் அந்தஸ்தில் பல்வேறு பணியிடங்களில் பணியாற்றி வரும் துணை கலெக்டர்கள் 30 பேரை பணியிடம் மாற்றம் செய்து வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை தமிழ்நாடு சிமெண்ட் கழக முதுநிலை மேலாளர் நெல்லை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தனி துணை கலெக்டராக நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட்டு அசிஸ்டெண்ட் பதவிக்கு 241 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, (25 ஆங்கிலவார்த்தைகள்/ நிமிடம்) தட்டச்சு திறன், அடிப்படை கணினி அறிவு ஆகியன. இதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை. தேர்வு நடைபெறும் இடங்கள்: மதுரை, சேலம், நெல்லை, குமரி, திருச்சி, சென்னை, கோவை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.3.2025. <

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை சௌந்தர சபையில் காந்திமதி அம்பாளுக்கு சௌந்தர சபாபதி திருநடன காட்சி தரும் உற்சவமும், நாளை மறுநாள் கோவில் பொற்றாமரை குளத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், 9 முதல் 15 வயதுடைய இளம் தலைமுறை உங்களை ‘கடலாக’ கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை கருப்பொருளாக வைத்து கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக அஞ்சல் துறை தலைவர் சென்னை, நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.