India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இன்று தாமிரபரணி ஆற்றை மாநகர பகுதியில் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் 10 பாய்ண்டுகளில் ஆய்வு செய்ய உள்ளனர். தாமிரபரணி ஆறு மட்டுமின்றி பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான வழித்தட நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு தினமும் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ. 9) காவலர்களின் பெயர், அவர்களின் தொடர்பு எண் விவரங்கள் அடங்கிய அட்டவணையை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (நவ.,9) விடுத்துள்ள அறிக்கையில், மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை மறுவாழ்வு இல்லங்கள் ஆகியவை சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். பதிவு செய்யாத இல்லங்கள் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றுள்ள நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸை ராஞ்சி விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில காங்., செயல் தலைவர் சுபாஷ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு பிரச்சார பயண பணிகளை மேற்கொண்டார்.
நெல்லை, பாளை பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்த புகாரின் தொடர்பாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் நாளை(நவ.,10) பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கின்றனர். இதனை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடங்களில் நேற்று முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் முழு வீச்சில் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலையில் 18 மி.மீ. மழையும், ஊத்து பகுதியில் 30 மி.மீட்டர் காக்காச்சி பகுதியில் 22 மி.மீட்டர் நாலுமுக்கு பகுதியில் 26 மி.மீட்டர், மூலக்கரைப்பட்டியில் 7 மி.மீட்டர் என மொத்தம் 125 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது .
நெல்லை ஈ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும் 13-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஈ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர்கள், துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரிகள், மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்கள் பங்கேற்பர். எனவே பயனாளிகள் குறை இருந்தால் கூட்டத்தில் பங்கேற்று நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம், இரவு நேரங்களில் விசாரணை என்ற பேரில் பொதுமக்களை அச்சுறுத்தக் கூடாது. தென் மாவட்டங்களில் போதைப்பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கச்சிகுடா to நாகர்கோவில் வாராந்திர ரயில் நாளை(நவ.,10) கச்சிக்குடாவில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக செல்லாமல் கரூர், திண்டுக்கல் மார்க்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு 11ம் தேதி வந்து சேரும். இதுபோல் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்ரா – நெல்லை ரயிலும் திருச்சி செல்லாமல் கரூர், திண்டுக்கல் வழியாக நாளை நெல்லை வந்து சேரும் என அறிவிக்கப்படடுள்ளது.
நெல்லை மாவட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டை நகல் கோரி விண்ணப்பித்தல், கைப்பேசி எண் பதிவு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்கள் பெற முடியும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.