Tirunelveli

News February 26, 2025

நெல்லை: இதை செய்தால் 6 மாதம் தண்டனை உறுதி 

image

நெல்லை ரயில் நிலையம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி வாசகத்தை திமுகவினர் அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே சொத்து சட்டப்படி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை 6 மாத சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News February 26, 2025

லஞ்ச ஒழிப்பு இயக்கம் சார்பில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

image

திசையன்விளை மின்சார துறையில் உள்ள அஜிஸ்குமார்JE,செல்வின்(CA) ஆகியோர் மின் இணைப்பு கேட்டு வருவோரிடம் ஒரு மின் இணைப்புக்கு ₹50,000 பெயர்மாற்றம் Tariff Charge ஆகியவற்றுக்கு பணம் தந்தால் மட்டுமே மின் இணைப்பு பெறமுடியும் என மிரட்டி பணவசூல் வேட்டை நடத்தி வருவதினால் இவர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு இயக்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

News February 25, 2025

நெல்லை:  இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (பிப்.25] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, நெல்லை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ரகு மேற்பார்வையில் இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அவசர உதவிக்கு எண் 100ஐ அழைக்கவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

News February 25, 2025

மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வரும் 27ம் தேதி மாலை 4.30மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

நெல்லைக்கு வருகை தரும் தமிழக ஆளுநர்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகின்ற 27-ஆம் தேதி நெல்லைக்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து 28ஆம் தேதியும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். அவரின் வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

News February 25, 2025

தீண்டாமை கடைபிடிக்காத ஊராட்சிக்கு ரூ 10 லட்சம் பரிசு

image

ஆண்டுதோறும் தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்திற்கு ரூ10 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 2023-24-ஆம் ஆண்டுக்கான தீண்டாமை கடைபிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் நெல்லை மாவட்டம் தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் வருகை தந்து ஊராட்சி தலைவரிடம் காசோலை வழங்கினார்.

News February 25, 2025

நெல்லையப்பர் கோவிலில் பாராயணம்

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (பிப்.26) இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் தெற்கு பிரகாரத்தில் சிவநேச செல்வர்கள் கலந்து கொள்ளும் (நான்கு காலமும் ) வழிபாடு நிகழ்ச்சி மற்றும் திருமுறை சுற்று பாராயணம் நடைபெறுகிறது . திருவுரு மாமலைபன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு ஆசிரியர் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது.

News February 25, 2025

நெல்லையில் 31 இடங்களில் முதல்வர் மருந்தகம்

image

நெல்லை மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வர் மருந்தகம் செயல்படுவதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அதில் களக்காடு, பணகுடி, வடக்கன்குளம், மேலப்பாளையம், நாங்குநேரி, சமூகரங்கபுரம், லெவிஞ்சிபுரம், பத்தமடை, வன்னிக்கோனேந்தல், வீரவநல்லூர், திசையன்விளை, பாளையங்கோட்டை, ஏர்வாடி, ராதாபுரம்,மூலைக்கரைப்பட்டி,ஆவரை குளம், வண்ணார்பேட்டை, அம்பை, விகேபுரம், சுத்தமல்லி, வள்ளியூர் பகுதியில் மருந்தகம் செயல்படுகிறது.

News February 25, 2025

நெல்லையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News February 24, 2025

பரோடா வங்கியில் தொழிற்பயிற்சி

image

பரோடா வங்கியில் (Bank of Baroda) தேசிய அளவில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேசிய அளவில் மொத்தம் 4,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 223 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். 20-28 வயது உடையவர்கள் <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் – 11.03.2025 *ஷேர்

error: Content is protected !!