Tirunelveli

News November 20, 2024

ஏழு மணி நிலவரப்படி 539 மில்லிமீட்டர் மழை

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை காணப்பட்டது. அம்பையில் 38 மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 47.20 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 58 மில்லி மீட்டர், களக்காட்டில் 57.20 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 33 மில்லி மீட்டர் ஒட்டுமொத்தமாக இன்று காலை 7 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 539. 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

image

இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 9:15 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு ஆளுமை திறன் பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சட்டமன்ற பேரவை பொதுப் கணக்கு குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

News November 20, 2024

நெல்லையில் மழை தொடரும்!

image

நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

News November 20, 2024

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளதால் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 19, 2024

நெல்லை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அடிஉரம் மற்றும் பிற உரங்கள் பெற அடங்கல் சான்று கட்டாயம் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உரங்கள் பெற ஆதார் கார்டு மட்டுமே போதுமானது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் வேளாண்மை துறை அலுவலர்களை 04622572514 என்ற தொலைபேசி எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர்(பொ) கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் மற்றும் கைப்பேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டது. இரவு காவல்துறை சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News November 19, 2024

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஒருவர் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திரையரங்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்

News November 19, 2024

கைபேசியை தவிர்க்க வேண்டும் – மாநகர காவல்துறை

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களுக்கு தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவ.19) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனம் ஓட்டும் போது கைபேசியை தவிர்க்க வேண்டும் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளனர்.

News November 19, 2024

மாவட்டத்தில் இன்று 7 மணி வரை செய்த மழை அளவு

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று(நவ.18) பரவலாக மழை காணப்பட்டது குறிப்பாக சேரன்மகாதேவி பகுதியில் 9.40 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 4 மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 3 மில்லி மீட்டர், களக்காடு பகுதியில் 6.20 மில்லி மீட்டர், கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 5.80 மில்லி மீட்டர், மூலக்கரைப்பட்டியில் 2 மில்லி மீட்டர் என மொத்தம் 55 இன்று காலை 7 மணி நிலவரப்படி 54.60மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!