Tirunelveli

News April 1, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் & அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க செல்போன் அல்லது வாட்ஸ் அப் “வணக்கம் நெல்லை” என்னும் செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 97865 66111 எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம் என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*

News April 1, 2025

5 அணைகளுக்கு நீர்வரத்து நின்றது

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் வறண்ட நிலை காணப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, மணிமுத்தாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 5 அணைகளுக்கு நீர்வரத்து இன்று (ஏப்.1) முற்றிலும் நின்றது. பாபநாசம் அணைக்கு மட்டும் வினாடிக்கு 154 கன அடி நீர் வருகிறது.

News April 1, 2025

கோபால சுவாமி பங்குனி உத்திர நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

பாளையங்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி திருக்கோயில் விழாக்களில் முக்கிய விழாவான பங்குனி உத்திரத் திருவிழா ஏப்.3 அன்று தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏப்.13 வரை திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான நிகழ்ச்சி விபரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஏப்.3 அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. ஏப்.12 அன்று தேரோட்டம் வைபவம் நடைபெற உள்ளது.

News April 1, 2025

கோடையில் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம்

image

முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவகுருநாதன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் 8000 ஏக்கரில் நெல் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம். குறுகிய காலத்தில் லாபகரமான விளைச்சல் பெறலாம் என தெரிவித்துள்ளார் .

News April 1, 2025

நெல்லை ஆட்சியர் அலுவகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடுத்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2025

நிலுவைத் தொகை ரூ.36 கோடி வழங்க வலியுறுத்தல்

image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு  சிறுபான்மையினர் அமைச்சகத்தால் ரூ.68 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பாக்கித்தொகை ரூ.36 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை விரைவில் ஒதுக்கீடு செய்யுமாறு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

News April 1, 2025

திருச்செந்தூர் செல்லும் நெல்லை பக்தர்கள் கவனத்திற்கு

image

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் பெருந்திட்டம் வளாகப் பணிகள் நடப்பதால் மார்ச் 31 முதல் பயணியர் விடுதி செல்லும் வழியில் உள்ள தற்காலிக வாகன நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே நெல்லை மக்கள் சரியான பாதையில் சென்று முருகனை தரிசிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

News April 1, 2025

3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை

image

நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் போலீசாரின் துரித நடவடிக்கையால் கடந்த 3 மாதங்களில் 12 கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையும், 41 பேருக்கு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தில் பெற்று தரப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 41 பேரில் 14 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

News April 1, 2025

நெல்லை வரும் கேரளா முதல்வர்

image

 மதுரையில் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழகத்திற்கு வருகிறார். மதுரைக்கு செல்லும் வழியில் அவர் இன்று மதியம் நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவருந்த உள்ளதாகவும், சிறிது நேர ஓய்வுக்கு பின் அவர் அங்கிருந்து நேராக மதுரைக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News April 1, 2025

ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி

image

சேரன்மகாதேவி – களக்காடு சாலையில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நேற்று சென்ற ஆட்டோ ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்த நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!