Tirunelveli

News December 3, 2024

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

image

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்ததில் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று (டிச.3) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பண பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News December 3, 2024

அரிய வகை பாம்புகளை கடத்தினால் 7 ஆண்டு சிறை

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக, அம்பை கோட்ட துணை இயக்குநர் இளையராஜா நேற்று(டிச.,2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்பிரிவு 4-ன் கீழ் வனத்துறையினர் அரிய வகை பாம்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆதலால், மண்ணுளிப் பாம்பு போன்ற அரிய வகை பாம்புகளை கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளார்.

News December 3, 2024

நெல்லையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நெல்லை பாளையங்கோட்டையில் எல்ஐசி முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வருகின்றனர்.

News December 3, 2024

முதல் நாள் கூட்டத்தில் டங்ஸ்டன் குறித்த தீர்மானம்: அப்பாவு

image

சென்னை தலைமை செயலகத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றும், முதல் நாள் கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் குறித்த தனி தீர்மானத்தை முதல்வர் கொண்டுவர இருப்பதாக அவர் தெரிவித்தார்.

News December 3, 2024

நெல்லை அருகே வீட்டுத் தோட்டத்தில் அபூர்வ ஆமை!

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயா(35). இவரது வீட்டு தோட்டத்திற்குள் அபூர்வ வகையை சேர்ந்த நட்சத்திர ஆமை ஒன்று நேற்று புகுந்துள்ளது. இதை பலரும் சென்று வேடிக்கை பார்த்தனர். தொடர்ந்து ஆமை இருப்பது குறித்து அவர் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினர் சென்று அந்த நட்சத்திர ஆமையை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.

News December 3, 2024

நெல்லையப்பர் கோயிலில் மகா வேள்வி!

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஜனவரி 5ஆம் தேதி மகா மிருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி நடைபெற உள்ளது. தொடர்ந்து 24வது ஆண்டாக இந்த வேள்வி நடைபெற உள்ளது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். SHARE IT.

News December 3, 2024

பாளையங்கோட்டையில் அரங்கேறியது ஆணவக் கொலை?

image

பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள வீட்டில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயகுமார்(24) என்ற இளைஞர் நேற்று(டிச.,2) படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த சரோஜினி என்பவரை பார்க்க வந்தபோது அவரது சகோதரர் தனது நண்பருடன் சேர்ந்து வெட்டியது தெரியவந்தது. வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.

News December 3, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்!

image

நெல்லையில் இன்று(டிச.,3) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பிரதான கட்டடத்தில் நடைபெறுகிறது. #காலை 10:30 மணிக்கு ஐகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. #மாலை 6 மணிக்கு கேடிசி நகர் செந்தில் நாயகம் அரங்கில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை கூட்டம் சொற்பொழிவு நடக்கிறது.

News December 2, 2024

நெல்லை மாவட்டத்தில் இரவு காவல் அதிகாரிகள் விவரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் இன்று(டிச.02) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் விபரம் மற்றும் கைப்பேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டது. இரவு காவல்துறை சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News December 2, 2024

பாதுகாப்பே முதன்மை – நெல்லை மாநகர காவல்துறை

image

நெல்லை மாநகர காவல்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், சாலை விதிகளை மதிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.02) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், பாதுகாப்பே முதன்மை, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!