India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவகுருநாதன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் 8000 ஏக்கரில் நெல் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம். குறுகிய காலத்தில் லாபகரமான விளைச்சல் பெறலாம் என தெரிவித்துள்ளார் .

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடுத்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு சிறுபான்மையினர் அமைச்சகத்தால் ரூ.68 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பாக்கித்தொகை ரூ.36 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை விரைவில் ஒதுக்கீடு செய்யுமாறு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் பெருந்திட்டம் வளாகப் பணிகள் நடப்பதால் மார்ச் 31 முதல் பயணியர் விடுதி செல்லும் வழியில் உள்ள தற்காலிக வாகன நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே நெல்லை மக்கள் சரியான பாதையில் சென்று முருகனை தரிசிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் போலீசாரின் துரித நடவடிக்கையால் கடந்த 3 மாதங்களில் 12 கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையும், 41 பேருக்கு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தில் பெற்று தரப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 41 பேரில் 14 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

மதுரையில் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழகத்திற்கு வருகிறார். மதுரைக்கு செல்லும் வழியில் அவர் இன்று மதியம் நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவருந்த உள்ளதாகவும், சிறிது நேர ஓய்வுக்கு பின் அவர் அங்கிருந்து நேராக மதுரைக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சேரன்மகாதேவி – களக்காடு சாலையில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நேற்று சென்ற ஆட்டோ ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்த நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் கோயில் கொண்டு அருளாட்சி செய்கிறாள் ஸ்ரீஆயிரத்தம்மன். இங்கு, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது விசேஷம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ராகுகாலத்தில் மாதுளைத் தோலால் நெய்விளக்கேற்றி, தொடர்ந்து 41 நாட்கள் வழிபடுகிறார்கள். பக்தர்கள் அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, மனதார வேண்டிக் கொண்டால் கடன் தொல்லைகள் தீரும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*

நாங்குநேரி டோல்கேட்டில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்கிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78-சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது, ஆண்டுக்கு 2 முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதன்படி நாங்குநேரி டோல்கேட்டில் இன்று இரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்ககட்டண உயர்வால் பொருட்கள் விலை உயர வாய்புள்ளது.

நெல்லை மாவட்ட தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கோடை வெயில் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி நெல்லை கல்வித்துறை அலுவலகம் அறிவிப்பு கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வரும் ஏப்-7ம் தேதி தேர்வுகள் தொடங்கி 17ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது. *குழந்தைகளே கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழியுங்கள*
Sorry, no posts matched your criteria.