Tirunelveli

News April 5, 2025

நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் மே 5ஆம் தேதி வரை நீட்டீப்பு

image

நெல்லை, மதுரை, குமரி மாவட்ட பயணிகள் பயனடையும் வகையில் தென்னக ரயில்வே சார்பில் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு நெல்லை வழியாக சிறப்பு ரயில் ( வ.எண்.06012 ) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை பள்ளி கல்லூரிகளுக்கு விடை இருப்பதால், இந்த ரயில் சேவை வருகிற ஏப்ரல்13ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

News April 4, 2025

நெல்லையில் விரைவில் புதிய வருவாய் குறுவட்டங்கள்

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த்துறை சம்பந்தமான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வருவாய் குறுவட்டங்கள் மற்றும் புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

News April 4, 2025

திருநெல்வேலியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

நெல்லையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி, கணக்காளர், விற்பனை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படங்கள் உள்ளது. இதில் இளங்கலை பட்டம் பெற்ற 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஏப்.30 க்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு செய்தியை ஷேர் செய்யவும்.

News April 4, 2025

நாங்குநேரி பெயர் காரணம் தெரியுமா ?

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒர் பழமையான ஊராகும். இங்குள்ள பெரிய குளத்தில் நடுவே வானமாமலை பெருமாள் தோன்றியதாக ஐதீகம். பெருமாளுக்கு நாங்கன், நாராயணன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஏரியில் நாங்கன் உதித்த இடம் என்பதால் இவ்வூர் நாங்கனேரி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மருவி நாங்குநேரி என ஆனது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நாங்குநேரி ஊருக்கு சென்று பழமையான நாங்கனை தரிசித்து வாருங்கள்.

News April 4, 2025

மூதாட்டி மீது ஆட்டோ மோதி உயிரிழப்பு

image

பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி காந்திமதி (70). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை பார்த்து வந்தார். நேற்று பாளை பேருந்து நிலையம் அருகே சென்று விட்டு திரும்பிய போது அவர் மீது ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.3) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஆவுடையப்பன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

நெல்லை மண்டலத்தில் ரூ.9.10 கோடி வரி பாக்கி – பகீர் தகவல்

image

திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் சொத்து வரி எவ்வளவு பாக்கி இருக்கிறது என்ற தகவல் கேட்டு பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மாநகராட்சி கொடுத்த தகவலில், திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் ரூ.9.10 கோடி சொத்து வரி பாக்கி இருப்பதாக தகவல்  இன்று வெளியாகியுள்ளது.

News April 3, 2025

திருநெல்வேலியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

ஜிப்ளி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் (Ghibli)ஜீப்ளி-யாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் AI உங்களுடைய முகத்தை பயன்படுத்தலாம். உங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தனியுரிமையை சரிபார்க்கவும். நம்பகமான AI தளங்களை மட்டும் பயன்படுத்தவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!