Tirunelveli

News December 11, 2024

முன்னாள் படை வீரர்கள் இல்ல பெண்களுக்கு தையல் இயந்திரம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசு சார்ந்த நிறுவனங்களில் 3 மாதம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்ற முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அனுகி விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

News December 11, 2024

அதிக வேக பயணத்தால் ஆபத்து – காவல்துறை அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிவேகத்தை தவிர்த்து மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கி விபத்தில் உள்ள பயணத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

News December 11, 2024

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சமுதாய மற்றும் வகுப்பு நல்லினத்திற்கான பேரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல் அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இது தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் awards.tn.gov.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.15 ஆகும். இந்த தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் நேற்று(டிச.10) சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்

News December 11, 2024

டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன .விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இணைய விரும்பும் விவசாயிகள் இந்த மாதம் 19ம் தேதிக்குள் இணைந்து கொள்ளலாம் என்றார் .

News December 11, 2024

நெல்லைப்பர் கோயிலில் 23 அடி உயர பனை மரத்தில் ருத்ர தீபம்!

image

வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை(டிச.,12)  மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. சொக்கப்பனை ஏற்றுவதற்காக 23 அடி உயர பிரம்மாண்ட பனை மரத்தில் பனை ஓலைகள் சொருகி சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

News December 11, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விவரம்

image

#நெல்லையில் இன்று(டிச.,11) காலை 10 மணிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.#காலை 7.30 மணிக்கு பாரதியார் சிலைக்கு உலக பொது சேவை நிதியம் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது.#காலை 10 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

News December 11, 2024

நெல்லையில் கணவர் கொலை: மனைவி, பிள்ளைகள் வாக்குமூலம்

image

நெல்லை, டோனாவூரை சேர்ந்த அந்தோணி தாஸ்(44) தலையில் காயத்துடன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில், அவரது மனைவி சுபா(41), மகன்கள் எபனேசர், ஜெனிபர், மகள் சோபனா பிரியங்கா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், சம்பவத்தன்று அவதூறாக பேசியதால் கழுத்தை நெரித்தபோது இறந்து விட்டதாகவும் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கிறது.

News December 10, 2024

நெல்லை மாவட்ட இரவு பணி காவல் அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்திரவின்படி நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.10) இரவு முதல் நாளை காலை வரை காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவு நேர காவல் சேவை தேவைப்படும் பொதுமக்கள் இதில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News December 10, 2024

இளநிலை இல்லக்காப்பாளர் பணி – ஆட்சியர் 

image

நெல்லை மாவட்டத்தில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடத்திற்கு ரூ.18,000 – ரூ.56,900 ஊதியத்தில் நேர்முக தேர்வில் அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் தங்கி பயின்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் பாளையங்கோட்டை அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News December 10, 2024

விவசாயிக்கு அரிவாள் வெட்டு 

image

களக்காடு அருகே திருக்குறுங்குடி கீழூரை சேர்ந்த விவசாயி ஆனந்தராஜுக்கும் லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட முன் பகை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நடராஜனும் அவரது மகனும் சேர்ந்து ஆனந்தராஜை அரிவாளை கொண்டு நேற்று தாக்கினர்.இது குறித்து ஆனந்தராஜ் களக்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!