Tirunelveli

News December 12, 2024

மீனவர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும் -அப்பாவு

image

ராதாபுரம் பகுதியை சார்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன் பிடித்து செய்தபோது பக்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் டிசம்பர் 10ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு திரும்புவதற்கான விமான கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்று கொண்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென முதல்வரிடம் அப்பாவு நேற்று வலியுறுத்தியுள்ளார்.

News December 12, 2024

நெல்லை மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு

image

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று(டிச.,12) அதி கனமழைக்கான ‘RED ALERT’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி, சென்னை, காவிரி படுகை பகுதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால், காலை முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT

News December 12, 2024

நெல்லை மாவட்டத்தின் மழை நிலவரம்

image

நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று(டிச.12) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் திருநெல்வேலி மாநகரில் 6 மில்லி மீட்டர் மழை, பாளையங்கோட்டையில் ஐந்து மில்லி மீட்டர் மழை, சேரன்மகாதேவியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

News December 12, 2024

நெல்லை மாணவிக்கு இரண்டு உலக சாதனைகள்

image

நெல்லை வண்ணாரப்பேட்டை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரது ஒன்பது வயது மகள் வர்ஷினி கடந்த மாதம் 1,330 திருக்குறளில் திருவள்ளுவரின் உருவத்தை 33 அடி உயர கதர் துணியில் வரைந்து அசத்தினார். இந்நிலையில் மாணவியின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் தற்போது அவருக்கு டிசிபி வேல்டு ரெக்கார்ட் மற்றும் ஜாக்கி புக் ஆங் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டு உலக சாதனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே மாணவியை பலரும் பாராட்டுகின்றனர்.

News December 12, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

image

நெல்லையில் இன்றைய நிகழ்ச்சிகள் விபரம்: பிற்பகல் 2 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பாளை மைய நூலகத்தில் பாரதியார் மாதாந்திர இலக்கிய புத்தக வெளியீட்டு விழா சிஇஓ தலைமையில் நடைபெறுகிறது. இன்று(டிச.12) மாலை 6.30 மணிக்கு மேல் நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

News December 12, 2024

நெல்லை மாவட்டத்தில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று(டிச.12) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் 1 – 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2024

நெல்லையில் விடுமுறை அறிவிப்பு!

image

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள 1 – 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற வகுப்புகளுக்கு மழையின் சூழல் பொறுத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 12, 2024

பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 14ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்டம் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் மற்றும் குடும்ப அட்டையில் கைப்பேசி எண் மாற்றுதல் போன்ற பல விஷயங்களுக்கு மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

நெல்லை மாவட்ட காவல் ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார், உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

News December 11, 2024

குங்குமப்பூ பெயரில் சைபர் கிரைம் மோசடி

image

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் சைபர் கிரைம் குற்றவாளிகள் “சப்ரோன் இன்வெஸ்ட்மென்ட்” மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். உலக வங்கியில் பணி செய்வதாக கூறி குங்குமப்பூ மொத்தமாக சப்ளை செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி பணத்தை பறிக்கின்றனர். எனவே பொதுமக்கள் இது குறுத்து ஏமாறவேண்டாம். மேலும் 1930 புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!