India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று(டிச.13) பெய்த மழையின் காரணமாக ஊத்து பகுதியில் 235 மில்லி மீட்டர், நான்கு மூக்கு பகுதியில் 220 மில்லி மீட்டர் ,காக்காச்சியில் 192 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 179 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 1377 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது, முக்கூடல் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படை முன்னெச்சரிக்கையாக களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படை அணி நெல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் உட்பட ஒன்பது தாலுகாவில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இன்று(டிச.14) காலை தேசிய மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
இன்று காலை 9:45 மணிக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கூடுகிறது. காலை 10 மணி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. காலை மணிக்கு நெல்லை மாவட்ட மத்திய மாநில உள்ளாட்சி பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டு விழா சங்கீத சபாவில் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்றும்(டிச.14) இரண்டாவது நாளாக நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை தாலுகாவில் 19 பேரும், சேரன்மாதேவி தாலுகாவில் 132 பேரும், பாளை தாலுகாவில் 9 பேர் என மாவட்ட முழுவதும் 63 ஆண்கள் 74 பெண்கள் 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 156 பேர் நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.13) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று (டிச.13) நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளது. அதில் 13.12.24 கடனாநதி-ராமநதியிலிருந்து வினாடிக்கு 22,000 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்டை வானிலை மையம் விடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 21 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.