India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் சொத்து வரி எவ்வளவு பாக்கி இருக்கிறது என்ற தகவல் கேட்டு பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மாநகராட்சி கொடுத்த தகவலில், திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் ரூ.9.10 கோடி சொத்து வரி பாக்கி இருப்பதாக தகவல் இன்று வெளியாகியுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் (Ghibli)ஜீப்ளி-யாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் AI உங்களுடைய முகத்தை பயன்படுத்தலாம். உங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தனியுரிமையை சரிபார்க்கவும். நம்பகமான AI தளங்களை மட்டும் பயன்படுத்தவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக பல தனியார் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் என்று தங்களை செல்போன் மூலம் அறிமுகப்படுத்தி 5ஜி டவர் அமைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது எனக்கூறி மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது போன்ற சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். இதில் யாரேனும் பாதிக்கபட்டால் 1930 இல் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் விவசாயிகள் தங்கள் நில உடமை ஆகியவற்றை விண்ணப்பித்து அடையாளம் பெறுவது அவசியம். இதற்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாளம் பெற வேண்டும் என்றார்.
நெல்லை வழியாக நாகர்கோவில் – கச்சிகுடா இடையே இயக்கப்பட்ட வாராந்திர பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் அல்லது ஆந்திர மாநிலம் சரளபள்ளிக்கு நெல்லை வழியாக இயக்கப்படும் ரயிலை இருவழிப் பாதையில் இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள்,கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.
ஏப்ரல் 5 – 2025 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பத்தமடை தைத்கால் தெருவை சேர்ந்த ஜமாலுதீன்(17) ஆரக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பத்தமடையில் இருந்து சேரன்மகாதேவிக்கு அவர் பைக்கில் சென்ற போது டிராக்டர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அம்பை அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரியப்பனை கடந்த 2021-ஆம் ஆண்டு இடப்பிரச்சனை சம்பந்தமாக அவரை அரிவாளால் வெட்டி தாக்கினர். இந்த வழக்கு அம்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது குற்றவாளியான வினோத் என்ற உலகநாதன் (29) பூதபாண்டியன் (58)ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.