India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். பின்பு கஸ்தூரி பேச்சை திரித்து வெளியிட்டு அவரை தீவிரவாதி போல் கைது செய்தார்கள், பிராமணர்களுக்கு ஆதரவாக பேசினாலே, இதுதான் நடக்கும் என்பதற்கு கஸ்தூரி கைது ஒரு உதாரணம். ஸ்டாலின் அரசு அண்ணா வழியிலோ,கலைஞர் வழியிலோ நடந்தால் கூட பரவாயில்லை. ஆனால்,அவர் பெரியார் வழியில் நடக்கிறார் என்றார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி கும்பிட வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், 2026 தேர்தலில் கூட்டணி கணக்கை வைத்து திமுக வென்று விட வேண்டும் என்ற நினைப்பது மைனஸ் ஆகும் என விஜய் தெரிவித்து இருப்பது நடந்தால் அவர் வாயில் நான் சர்க்கரை போடுவேன். ஆதவ் அர்ஜுன் மற்றும் திருமாவளவன் இனி விடுதலை சிறுத்தை கட்சியில் ஒண்ணா இருப்பார்களா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது என்றார்.
திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன்முதலில் திருச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை குடலிறக்கம் கருப்பை மற்றும் புற்று நோய்களை எளிய முறையில் அகற்ற ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி சமயபுரம் காவல் நிலையம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி (55), நேற்று வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு சக காவலர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சிறுகமணியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான வேளாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இந்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து 14 தேதி வரை நடைபெற உள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சியாக அங்கக வேளாண்மை இடுபொருள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, பஞ்சகாவியம் தயாரிப்பு போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் விளக்கம் கேட்கப்படும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து. தற்போது மக்களாட்சி நடைபெறுகிறது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
துறையூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளி பொன்மலர் என்பவர் தனியாக இருந்த போது அவர் அணிந்திருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்ஙள் பறித்து சென்றனர். சம்பவம் குறித்து துறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. துறையூர் போலீசார் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் நடராஜர் காலனி பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் சுகுமாரை இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாத்தூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (56) மற்றும் இவர்கள் உறவினர்கள் 3 பேரோடு ஆட்டோவில் புதுக்கோட்டை நோக்கி சென்ற பொழுது, சிட்கோ அருகில் காய்கறிகள் ஏற்றி வந்த பொலிரோ பிக் அப் வேன் மோதியதில் சந்திரசேகர் பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநாட்டில் திருச்சி எஸ்.பி கலந்துகொண்டு,நாம் தமிழர் கட்சியினரால் தானும் தனது குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பேசியிருந்தார். இந்நிலையில், இன்று திருச்சி மாவட்ட எஸ்பி மீது தமிழக டிஜிபி-யிடம் நாதகவினர் மீது பொய்வழக்கு பதிந்து தாக்குதல் நடத்துவதாகவும் புகார் அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.