Tiruchirappalli

News November 6, 2024

திருச்சியில் 350 கிலோ குட்கா பறிமுதல்

image

திருச்சி பாபு ரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை விற்பனை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரேவராம், கஜானா ராம் ஆகிய இருவரையும் கைது செய்து வாகனங்கள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

News November 6, 2024

திருச்சியில் நடிகை கஸ்தூரி மீது வழக்குபதிவு.!

image

திருச்சி மாநகர் வயலூர் சாலையைச் சேர்ந்த ரெட்டி நலச்சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் இன்று திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது மூன்று பிரிவுகளின் கீழ் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நிலையில் இவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 6, 2024

உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகை: அமைச்சர் அறிக்கை

image

மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை திருச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். எனவே இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் திருச்சிக்கு வரும் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் இதில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை விடுத்துள்ளார்.

News November 6, 2024

லால்குடி ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

image

லால்குடி அருகே கோவண்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த போன்சியாஸ் வயது 42 லால்குடி வெள்ளனூர் பகுதியில் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். போன்சியாஸ் வெள்ளலூர் பகுதியில் உள்ள முத்து குளம் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அவர் தண்ணீர் மூழ்கி இறந்து விட்டார். லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 6, 2024

திருச்சியில் தொழில்நுட்ப பணிகள் தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வானது வரும் 9 ம் தேதி சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் 1840 தேர்வர்கள் முற்பகலில் எழுத உள்ளனர். மேலும், 2 இயங்கு குழுக்கள் மற்றும் தேர்வு மையத்தினை கண்காத்திட 6 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

ஓவரா படிக்க சொல்றாங்க… நாடகமாடிய மாணவிகள்

image

துறையூரைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள் நேற்று அடையாளம் தெரியாத 3 பேர் காரில் மாணவிகளை கடத்தியதாக, சிறுகாம்பூர் அருகே காரை நிறுத்திய போது தப்பி வந்ததாக அப்பகுதியினரிடம் தெரிவித்தனர். பின் தகவலறிந்த முசிறி காவல்துறையினர் விசாரித்ததில் மாணவிகள் கடத்தப்படவில்லை. வீட்டில் படிக்க சொல்லி திட்டியதால் வீட்டை விட்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின் மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

News November 5, 2024

துணை முதலமைச்சர் நாளை திருச்சி வருகை

image

மணச்சநல்லூர் தொகுதி உட்பட்ட இருங்கலூர் பகுதியில், நாளை மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மகள் திருமணத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவரை வரவேற்க திருச்சி வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

News November 5, 2024

முதலமைச்சரும், தவெகெ விஜய்யும் ஒரே மேடையில்: திருமாவளவன்

image

அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் என ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது அந்நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என திருச்சியில் இன்று திருமாவளவன் பேட்டி அளித்தார். ஷேர் செய்யவும்

News November 5, 2024

திருச்சி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி பொது சேவை மையம், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி மற்றும் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என கூறியுள்ளார்.

News November 5, 2024

திருச்சியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருச்சியில் சமீப காலமாகவே தொடர்ந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி தனியார் கல்லுரி மற்றும் 4 பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பள்ளிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SHAREIT