India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500 லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் வருவாய் உதவியாளர் சுபேர்அலி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில், முன்னாள் வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, பொன்மலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் 25 வயது பெண் ஊழியர் 08.08.25 அன்று டூவீலரில் வேலைக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காணக்கிளியநல்லூர் காவல் நிலைய 2ஆம் நிலை காவலர் கோபாலகிருஷ்ணனை (32) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் வரும் 23 முதல் 25 மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். , 23ஆம் தேதி திருச்சி கிழக்கு திருவெறும்பூர், லால்குடி, 24 ஆம் தேதி முசிறி, மணச்சநல்லூர், துறையூர், 25ஆம் தேதி மணப்பாறை, ஸ்ரீரங்கம் மேற்கு தொகுதிக்கு வருகை புரிகிறார்.
திருச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் இங்கே <
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்றஉறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் திருச்சி – சென்னை எழும்பூா் சோழன் விரைவு ரயில், வரும் 20-ஆம் தேதி மட்டும் பொறியியல் பணிகள் காரணமாக, சுமாா் 1.45 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 12:45 மணிக்குப் புறப்படும். மேலும் இந்த ரயில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.