Tiruchirappalli

News January 3, 2025

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மீது வழக்குபதிவு

image

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக உள்ள ரமேஷ் பாபு கடந்த 01.04.18 ஆம் ஆண்டு முதல் 31.12.21 ஆண்டு வரை அவரின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ரமேஷ் பாபு மற்றும் அவரது மனைவி இருவரின் மீது திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 3, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே நிர்வாகம் திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பு ரயில்(06190) ஜனவரி 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மாலை 5.35 மணிக்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் மாலை 3.30 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

News January 3, 2025

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் – ஆணையர் தகவல்

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்காக அரசாணை வெளியிட்டு 2 நாட்கள் தான் ஆகின்றன.முதலில் எந்தெந்தப்பகுதிகள் மாநகராட்சியுடன் இணைகிறது,என்பதற்கான உத்தேசமாக 22 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்துள்ளோம்.மேலும்,2026-ல் நடைபெறும் மாநகராட்சி தேர்தலானது,புதிய வார்டுகளுடன்,மறுவரையறை செய்யப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக நடைபெறும்” என்றார்.

News January 3, 2025

விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிகள்

image

திருச்சி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற 12ஆம் வகுப்பு (அ) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஷேர் செய்யவும்

News January 2, 2025

திருச்சியில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகை டோக்கன்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகையை சிரமம் இன்றி மக்கள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். மேலும் முன்னதாக குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் என்றும் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

தாட்கோ மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி

image

திருச்சியில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இப்பயிற்சி பெற பட்டபடிப்பில் தேர்ச்சி, 21 முதல் 32 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். இதற்கு தகுதியானவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஷேர் செய்யவும்

News January 2, 2025

லால்குடி எம்எல்ஏ பரபரப்பு பதிவு

image

லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் சமூக வலைதளத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் யாரும் என்னுடன் பேசக்கூடாது என சொல்லி வந்த முதன்மையான மூத்தவர், தற்போது வெளி மாவட்ட செயலாளர்களிடம் என்னிடம் பேசுகிறீர்களா என விசாரிக்கிறார். நாங்கள் என்ன கட்சியையும் முதல்வரையும் விமர்சனம் செய்பவர்கள் இடமா பேசுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

ரயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை

image

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். இவர் பிஎஸ்என்எல் அலுவலக கேண்டினில் பணியாற்றி வந்தார். தற்போது கேண்டின் மூடப்பட்டதால், சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்,மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலில் இருந்த கோகுலகிருஷ்ணன் இன்று NO.1டோல்கேட் உத்தமர் கோவில் அருகே வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News January 2, 2025

பொங்கலுக்கு ரூ.5,000 கொடுத்தால் என்ன- ஜி கே வாசன் பேச்சு

image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் பேசியது:இடைத்தேர்தல் வந்தால் கணக்கு பார்க்காமல் கொடுக்கும் கட்சி.பொங்கலுக்கு ரூபாய் 5000 கொடுத்தால் என்ன.மழை பாதிப்பில் சென்னை, திருவண்ணாமலை,புதுச்சேரி மக்களுக்கு ஒரு சிலருக்கு தான் நிவாரணம் என்பது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஒத்த கருத்து என்பது தேர்தலில் மட்டும் ஓட்டு வாங்கி ஜெயிப்பது என்றார்.

News January 2, 2025

கேஸ் ரெகுலேட்டரில் வைத்து தங்கம் கடத்தல்

image

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகளை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி உடைமையில் 15 லட்சத்து 12 ஆயிரத்து 424 கிராம் தங்கம் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து பயணி இடம் விசாரித்து வருகின்றனர்…

error: Content is protected !!