Tiruchirappalli

News January 12, 2025

முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடக்க உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா குறித்த முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 12, 2025

இரண்டாவது நாளாக நடைபெற்ற கபடி போட்டிகள்

image

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திண்டுக்கல் மாரியம்மன் கோவில் திடலில் நேற்று கபடி போட்டிகள் தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போட்டிகள் நடைபெற்றன. அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டு விறுவிறுப்பாக விளையாடினர். பின்னர் இதில் தகுதி பெறுபவர்கள் அடுத்த சுற்று செல்வார்கள். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News January 12, 2025

மணப்பாறை விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

மணப்பாறை அடுத்த செவலூர் செல்லும் சாலையில் கடந்த 9ஆம் தேதி அவ்வழியே சென்ற டூரிஸ்ட் வாகனம் அதே வழியில் வந்த இருவர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News January 11, 2025

திருச்சி: பானையை உடைத்த எம்பி துரை வைகோ 

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ, அருண் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பானையை உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் துரை வைகோ கலந்து கொண்டு பானையை உடைத்தார். உடனிருந்த அனைவரும் துரை வைக்கோவை உற்சாகப்படுத்தினர்.

News January 11, 2025

நாகலாந்து ஆளுநரை வரவேற்ற திருச்சி ஆட்சியர்

image

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த,நாகலாந்து ஆளுநர் கணேசன் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து, உற்சாகமாக வரவேற்பு அளித்தார். பிறகு, கார் மூலம் அவர் புறப்பட்டு சென்றார். மேலும் நாகாலாந்து ஆளுநரின் வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

News January 10, 2025

திருச்சி தனியார் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

image

திருச்சி – கல்லணை சாலையில் செயல்பட்டு வரும் பேட்டரி, சூரிய மின் தகடு உள்ளிட்டவை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருகின்றனர். அமலாக்கத் துறையை சேர்ந்த அதிகாரிகள் மூன்றுக்கும் மேற்பட்டோர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 10, 2025

“யார் அந்த சார்” ஸ்டிக்கர் ஒட்டும் பணி

image

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் இன்று முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி மற்றும் முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகி வாகனங்களில் “யார் அந்த சார்” என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது. இதில் வளர்மதி தனது காரில் ஸ்டிக்கரை ஒட்டி தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

News January 10, 2025

பொதுமக்கள் நடமாட்டம் வேண்டாம்: ஆட்சியர்

image

அணியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது. இதனால்,அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஷேர் செய்யவும்

News January 9, 2025

திருச்சியில் 2 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை

image

திருச்சி மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும், திருச்சியில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்து இயங்கும் FL2, FL3, FL3A பார்கள், மதுக்கூடங்கள் விற்பனை இன்றி மூடப்படவேண்டும் என்றும், மீறி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 9, 2025

சமயபுரம் கோவிலில் முன்னாள் பிரதமர் மகன் தரிசனம்

image

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முன்னாள் பிரதமரின் மகனும், முன்னாள் மந்திரியுமான ரேவண்ணா நேற்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு விநாயகர், உற்சகாம்பாள், கொடிமரம் ஆகியவற்றை பக்தியுடன் வணங்கிச் சென்றார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!