India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை அடக்கிய நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரஞ்சித்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசாக இருசக்கர வாகனத்தை வழங்கி சிறப்பித்தார். ஜல்லிக்கட்டு வீரர்களும் பொதுமக்களும் அவரை பாராட்டினர்.
துறையூர் அருகே உப்பிலியபுரத்தில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் பொங்கலை முன்னிட்டு டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர் அப்துல்லா சாகிப் (56) இரவு ரோந்து பணியில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அண்ணா சிலை அருகே சுமார் 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் போலீசை பணி செய்வதை தடுத்து ஆபாசமாக திட்டி தாக்க முயன்றதாக தெரிகிறது. உடனே சப் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சர்ருமான கே.என்.நேருவின் அலுவலகத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. ராசாவை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் நேருவின் இந்த சந்திப்பின் போது மேயர் அன்பழகன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோருடன் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள அய்யனின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி, குறள் வாசித்தார். அப்போது மாநகரச் செயலாளர் மு. மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் குவிந்தனர். மேலும் நாளை திருவள்ளூர் தினம் என்பதால் டாஸ்மாக் கடைக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால் கூடுதலாக கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனி அருகே மேம்பாலம் அருகே உள்ள மதுபான கடையில் மது வாங்குவதில் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொது மக்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க சேவை மையத்தை இன்று மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை 89391 – 46100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம். இந்த நிகழ்வில் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் உற்சவர் எழுந்தருளி வந்த நிலையில் இன்று 29வது நாள் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை ஒட்டி இன்று பரமபத நாதர் சன்னதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் பெற்றம் மேய்த்துண்ணும் பெருமான் திருக்கோலத்தில் காட்சியளித்தனர். இதனைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்தனர்..
தொட்டியம், திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.12) டூவீலரில் சென்ற கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் மீது நாமக்கல் நோக்கிச் சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வேன் ஓட்டுநர் மாரிமுத்து என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு, தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு <
திருச்சி வணிக பகுதியின் தலைமை அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் திருச்சி எம்.பி துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் கரூர் எம்.பி எஸ்.ஜோதிமணி, பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண் நேரு புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.