India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே பாதுகாப்பு கருதி இன்று அவர் செல்லும் சாலையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முழுவதும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்று இருந்த மக்கள் பணி, கல்வி உள்ளிட்ட காரணங்களால் தங்கி உள்ள ஊர்களுக்கு புறப்பட்டனர். அதன்படி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் இன்று அதிகமாகவே காணப்பட்டது. இது மட்டுமல்லாமல் திருச்சி விமான நிலையத்திலும் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி பெரிய கடைவீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில்,வாழைப்பழம் விற்பனை செய்யும் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க 2 வாலிபர்கள் முயன்றனர். அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வாலிபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் உள்ள வேலை நாடுபவர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 24 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே திருச்சியை சேர்ந்த வேலை நாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்
திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கமணி என்கிற டேஞ்சா் மணி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த தங்கமணி, அவர்களது வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் நேற்று தங்கமணியை கைது செய்தனர்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் அனைத்து மாநிலங்கள், அயல் நாடுகளிலிருந்தும் 20,000 சாரண, சாரணியர் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், சிற்றுண்டி போன்ற பொருட்கள் விற்பனை செய்ய ஸ்டால்கள் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் 9791439078 என்ற எண்ணை தொடர்பு கொள்ளமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT
மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில், 1 வருட கால ஒப்பந்த அடிப்படையில் சமூக பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனித உரிமைகள், பொதுசுகாதாரம் ஆகியவற்றில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை <
கொழும்பிலிருந்து திருச்சிக்கு இன்று வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் வெளிநாட்டு பணத்தாள்கள் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 2,697 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.678.65 கோடிக்கு பொங்கலை முன்னிட்டு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ.46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ.179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ.151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. COMMENT IT
திருச்சியில் திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. மேலும், தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் 5000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.