India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொழிற்பயிற்சி மையம், மண்ணச்சநல்லூர் விடுதி வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம், சூரியூரில் தொழிற்பேட்டை, முதல்வர் படைப்பகம் மற்றும் அன்பு சோலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மக்களே SHARE பண்ணுங்க..
திருச்சி, அரியமங்கலம் பெரியார் தெரு அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்ராஜ்(64) கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில், பொன்ராஜ் மருமகளுக்கும், நிஷாந்த்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததை பொன்ராஜ் கண்டித்ததால் அவரை நிஷாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரசன்னா(20), குணசேகர்(21) ஆகியோர் தாக்கியுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து புத்தூர் வரை சுமார் ரூ.750 கோடி செலவில் 2 ரவுண்டானாக்கள், 5 இணைப்புகளுடன் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில், “தபால் நிலையத்தில் இருந்து புத்தூர் வரை இந்த பாலமானது அமைக்கப்படுகிறது. இதற்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமும் ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளது” என கூறியுள்ளனர்.
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பெரிய கடை வீதி, சின்னகடை வீதி, ஜாபர்ஷா தெரு, கம்மாளத்தெரு, நடு குஜிலி தெரு ஆகிய பகுதிகளில் நாளை ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் வண்ணப் பொடிகள் விற்பனை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் மணப்பாறை மற்றும் துறையூர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு ஜமால் முகமது கல்லூரி அருகில், டி.வி.எஸ் டோல்கேட் உள்ள திருச்சி அலுவலகத்தில் வருகின்ற 24.3.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொட்டியம் அடுத்த தோளூர்பட்டி ஊராட்சி திருச்சி நாமக்கல் சாலையில் அமைந்துள்ள பெரியார் சமத்துவ புறத்தில் நேற்று வீட்டுக்குள் புகுந்த 15 அடி நீளம் உள்ள பாம்பை அடித்துக் கொன்ற வீட்டின் உரிமையாளர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெறும் காட்டுப்பகுதி என்பதால் வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடித்துக் கொண்டனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரூப்1 முதல் நிலை தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து போட்டி தேர்வர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி நடைபெற்றன. அதில் ரொக்க பணமாக ரூபாய் 1 கோடியே 06 லட்சத்து 20ஆயிரத்து 548, தங்கம் 2 கிலோ 150 கிராம், வெள்ளி 3 கிலோ 580 கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 103, அயல்நாட்டு நாணயங்கள் 489 கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல் தொழிற்சாலையில் பொதுமேலாளராக பணியாற்றிய சண்முகம் சுட்டுக்கொண்டு இறந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை. அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பதும், சண்முகம் டெல்லியில் பணியாற்றியபோது அந்தத் துப்பாக்கியை வாங்கி இருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கி இருக்கிறார் என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணேசபுரம் 8வது தெருவை சேர்ந்த சண்முகம் (50) என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அலுவலகத்திற்குள் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் இவரது உடலை கைப்பற்றி கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.