Tiruchirappalli

News March 19, 2025

கிராம சபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

உலக தண்ணீர் தினமான வரும் 23ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். திருச்சி மக்களே இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 19, 2025

“தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்”

image

 மாநிலங்களவையில் அமைச்சக மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, “தென் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

News March 18, 2025

சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் தொடர்பு கொள்ளுங்க

image

திருச்சி மாவட்ட காவல்துறை இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில், உதவி எண் 1930-ஐ அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் குற்றங்களை பதிவு செய்து https://cybercrime.gov.in புகராளிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. கண்டிப்பாக பயன்படும்.

News March 18, 2025

திருச்சி மாவட்ட மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி செலுத்தாதவர்கள் தாமதமின்றி வரிகளை செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் அனைத்து கிராம பொதுமக்களும் ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ, வரி வசூல் முகாம்களிலோ அல்லது https://vptax.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கடன் அட்டை மூலம் வரிகளை செலுத்தலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE 

News March 18, 2025

துவரங்குறிச்சி: கிணற்றில் கிடந்த முதியவரின் உடல்

image

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள தாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கண் (75). இவர் காலை அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது தவறி நேற்று இருந்துள்ளார். பின்னர் ஊர் மக்கள் தகவல் தெரிவித்து அதன் பெயரில் தீயணைப்புத் துறையினர் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் சோதனையில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டது.

News March 18, 2025

திருச்சி விமான நிலையம் தனியாருக்கு குத்தகை

image

இந்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹோல் நேற்று மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூா் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிா்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு – தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

News March 18, 2025

திருச்சி ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ரயில் பயணிகள் ரயில் பயணத்தின் போது ரயிலின் மேற்கூறையில் அமர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான பயணங்களை தொடர வேண்டாம் என்றும், 25 ஆயிரம் வோல்ட் மின் திறன் கொண்ட மின் வயர் மேலே பாய்வதையும், விலைமதிக்க முடியாத உயிரை இழக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

News March 18, 2025

திருச்சி: காவல் உதவி ஆப்பை டவுன்லோடு செய்ய அறிவுரை

image

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, காவல் உதவி செயலியின் மூலம் ஸ்மார்ட்போனை பாதுகாவலனாக மாற்ற கூறியுள்ளது. குறிப்பாக பெண்கள் காவல் உதவி செயலியை இன்றே பதிவிறக்கம் செய்ய வேண்டும். Download link:https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi இதில் பதிவிறக்கலாம்.

News March 18, 2025

திருச்சியில் பாஜக மாவட்ட தலைவர் கைது

image

பாஜக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் R. அஞ்சாநெஞ்சன் தலைமையிலும் மாநில பொது செயலாளர் திருச்சி பெருங்கோட்ட பார்வையாளர் கருப்பு முருகானந்தம் வழிகாட்டுதலின் படி இன்று நம்பர் எண்.1 டோல்கேட்டில் மதுபான கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

News March 17, 2025

குறைதீர் கூட்டத்தில் 748 மனுக்கள் பெறப்பட்டன

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 748 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

error: Content is protected !!