India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே துலுக்கம்பட்டியைச் சேர்ந்த தென்னங்கீற்று வியாபாரியான குழுமி (52), நேற்று காலை துலுக்கம்பட்டியில் இருந்து காரைப்பட்டி என்னும் ஊருக்கு பைக்கில் வியாபாரத்திற்காக செல்லும் போது பைக்கில் வைத்திருந்த தென்னங்கீற்றுகள் நழுவியதால் ஒரு கையால் அதனை சரி செய்தவாறு பைக்கை ஓட்டி சென்றபோது, சாலையோர மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் அருள் புரிகிறாள் சமயபுரத்தாள். ஒருமுறை சந்நிதியில் வந்து நின்று, நம் மனக் குறைகளையெல்லாம் முறையிட்டு வேண்டினால் போதும், நம் துக்கங்களையெல்லாம் போக்குவாள் என்று பக்தர்கள் கூறுகின்றனர். “சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்” என்று சொலவடையும் உண்டு. இத்தலத்திற்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? என கமெண்ட் பண்ணுங்க. அம்மன் அருள் பெற SHARE பண்ணுங்க.
திருச்சி மாவட்டம் காவல் ஆய்வாளர்ளை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வையம்பட்டி காவல் ஆய்வாளராக பாலாஜி,மணப்பாறை அனைத்து மகளீர் காவல் ஆய்வாளராக கவிதா,மணப்பாறை காவல் ஆய்வாளராக ரகுராமன்,துவரங்குறிச்சி காவல் ஆய்வாளராக விஜய் கோல்டன்சிங்,ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்
திருச்சி இ.பி.காலனியை சோ்ந்த சங்கா்-கோமதி தம்பதி இடையே வரதட்சனை தொடர்பாக கடந்த 1.11.20 ஆம் ஆண்டு ஏற்பட்ட சண்டையில், சங்கர் தாக்கியதில் கோமதி கோமா நிலைக்கு சென்றார். இந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாசந்திரா நேற்று தீர்ப்பளித்தார். அதில், சங்கருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், கோமதிக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு உதவி வழக்கறிஞர் கிரேடு நிலை 2 க்கான முதல்நிலை தேர்வு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வை இரண்டு தேர்வு மையங்களில் 481 பேர் எழுத உள்ளனர். இதற்காக முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அலுவலராக ஆர்டிஓ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு, சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மாத்தூர், சோதிராயன்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (18), அவரது தங்கை 16 வயது மாணவி, இவர் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் நேற்று அதிகாலை அவர், வீட்டில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது அண்ணனும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Assistant Public Prosecutor Grade II (Preliminary) தேர்வு வரும் 22.02.2025 சனிக்கிழமை முற்பகலில் நடைபெற உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 481 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். இந்த தேர்விற்கு 9 மணிக்கு பின்னர் வரும் நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.17) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாற்றுதல், ஜாதி சான்று, இதர சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 492 மனுக்கள் பெறப்பட்டன.
Sorry, no posts matched your criteria.