Tiruchirappalli

News September 30, 2024

திருச்சியில் அஞ்சல் சேவை குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

image

மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருச்சி தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை வருகிற 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், சம்பந்தப்பட்ட கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து, அதில் திருப்தி இல்லாதவர்கள் மட்டுமே அனுப்ப வேண்டும், புதிய புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 29, 2024

திருச்சியில் அஞ்சல் சேவை குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

image

மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருச்சி தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தங்களது குறைகளை வருகிற 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், சம்பந்தப்பட்ட கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அந்த பதிலில் திருப்தி இல்லாதவர்கள் மட்டுமே அனுப்ப வேண்டும், புதிய புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 29, 2024

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்: ஆட்சியர்

image

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பெண்கள், வாக்காளர்கள், பொதுமக்கள் பங்கேற்று ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 29, 2024

திருச்சி பொதுமக்கள் செல்ல தடை

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அனியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், அக்.1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணிக்கு மேல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இதனை அப்பகுதி மக்களுக்கு ஷேர் செய்யவும்.

News September 28, 2024

தனியார் கல்லூரி பெண் முதல்வர் மீது தாக்குதல்

image

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது.  முதல்வராக இஷபெலியா ராஜகுமாரி உள்ளார். கல்லூரியில் இருந்தபோது ஒரு மர்ம நபர் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் அத்துமீறி உள்ளே புகுந்து அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் முதல்வரை மிரட்டி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். முதல்வரை தாக்கியவர் கிராபட்டியை சேர்ந்த லாலி கிளிண்டன் என்பது தெரியவந்தது.

News September 28, 2024

காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

image

திருச்சி மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட கண்ட்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தர் எஸ்எஸ்ஐ செந்தில்குமார், நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில், எஸ்எஸ்ஐ செந்தில்குமார், காவல் ஆய்வாளரின் கையெழுத்தை இவரே போட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் உண்மை தன்மை இருந்ததால் எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை பணி இடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

News September 28, 2024

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு

image

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2024க்குள், https://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு https://nrcb.icar.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்

News September 27, 2024

உலக சாதனை படைத்த சிறுமிக்கு எஸ்கே பாராட்டு

image

ஏழு உலக சாதனை படைத்த திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த ஜன்ஹவிதனவ் என்ற 4 வயது சிறுமியை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்திற்கு அக்குடும்பத்தினர் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

News September 26, 2024

ரயில் ஓட்டுனர்கள் பயிற்சி பெற திருச்சியில் மையம்

image

சென்னை இந்தியன் ரயில்வேயில் 20 வகைகளில், 14,800க்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்கள் உள்ளன. இது குறித்து, ரயில் ஓட்டுனர்கள் முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் அமர்ந்த இடத்தில் இருந்தே கணினி உதவியுடன் பயிற்சி பெறும் வகையில் ‘சிமுலேட்டர்’ அமைக்கப்படவுள்ளது. ரயில் இன்ஜின் குறித்து ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழகத்தில் ஆவடி, திருச்சி உட்பட நாடு முழுதும், 50 மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

News September 26, 2024

பைக்கில் வீலிங் செய்த சிறுவன் படுகாயம்

image

சோமரசம்பேட்டை அருகே ரெட்டை வாய்க்கால் பகுதியில் வசித்து வரும் லோகேஷ் குமார் என்ற சிறுவன் மண்ணச்சநல்லூர் பைபாஸ் சாலையில் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அத்தாணி என்ற இடத்தில் தனது வாகனத்தில் வீலிங் செய்து சாகசம் படைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்தில் மோதி பலத்த காயமடைந்தார். வீலிங் செய்து விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.