India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே.1ஆம் தேதி உலர் நாளாக கடைபிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சியில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும் FL2, FL3, FL3A, FL3AA, & FL11 ஆகிய ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அன்று மது விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor (WFH) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.25,000-ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..
திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..
தொட்டியம் அருகே கல்லுப்பட்டியில் விவசாயி சுப்பிரமணியன் கடந்த 25ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மணமேட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வேல்முருகன் (22), இன்பரசன் (19), கரண் (22), நவீன் (19), சசிகுமார் (42) மற்றும் சரவணன் (38) ஆகிய 6 பேரை தொட்டியம் போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<
திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா ஏப்.30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து மே.1ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் மே.9ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
Sorry, no posts matched your criteria.