India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 338 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 12,491 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 228 சிறைவாசி மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.
திருச்சிக்கு சென்னையிலிருந்து நேற்று வந்த பஸ்ஸில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இன்று ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 29 நபர்களை கைது செய்தனர். மொத்தம் திருச்சியில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் முன்னிலையில் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, இணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் தசரத பாண்டியன், வட்டக் கழகச் செயலாளர் ராஜா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.85% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.88 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.87 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று திருச்சி மாவட்டம் 5ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 16,737 மாணவர்கள் மற்றும் 17,032 மாணவிகள் என மொத்தம் 33,173 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 31,594 பேர் தேர்ச்சி பெற்றனர். தற்பொழுது, திருச்சி மாவட்டம் மாநிலத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சியில் மதியம் 1 மணிக்கு கரூர்- ஈரோடு கோவை வழியாக பாலக்காடு டவுன் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையம் ரயில்வே யார்டு மாற்றி அமைக்கும் பணியால், மதியம் 1 மணிக்கு பாலக்காடு டவுன் செல்லும் ரயிலானது (16843) திருப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் .பாலக்காடு வரை செல்லாது என்று திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 95.23 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.10 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.37% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சட்டத்தின் பரிணாம வடிவங்கள் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நேற்று நடந்தது.பள்ளியின் செயலாளர் மீனா தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சஞ்சை கிஷன் கவுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
Sorry, no posts matched your criteria.