India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் கடந்த 2.5.2024ம் தேதி ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி அவரின் வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் ரவுடி வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில்,
குற்றவாளி மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை இன்று குன்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.
திருச்சி மாநகரில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற நபர்கள் சாலையோரங்களிலும் பாலங்களுக்கு அடியிலும் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ரூ.1கோடியில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.அவற்றில் உணவுக்கூடம், சமையலறை, சுகாதார வளாகம் மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுமென மாநகராட்சி அலுவலர்கள் இன்று தெரிவித்தனர்.
பெண் காவல் அதிகாரிகளை ஆபாசமாக பேசியது தொடர்பாக, திருச்சி முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், திருச்சி தனிப்படை போலீசாரால் 2 நாட்களுக்கு முன் டெல்லியில் கைது செய்யப்பட்ட youtube நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை இன்று மதியம் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திருச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சார்ஜாவில் இருந்து வந்த ஏர் எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி டைல்ஸ் கட்டிங் மெஷினில் மறைத்து எடுத்து வந்த 1 கிலோ 299 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.92 லட்சம். மேலும் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி புத்தூரை சேர்ந்தவர் சந்திரா.இவர் முதுமை காரணமாக நேற்று புத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்நிலையில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லும் போது, மருத்துவமனையில் பணிபுரிந்த ஹவுஸ் கீப்பிங் மோகன் என்பவர் மூதாட்டி கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலி,காதை அறுத்து கம்மலையும் திருடியுள்ளார்.இதுகுறித்து இன்று அரசு மருத்துவமனை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறையூரை சேர்ந்த சல்மா. இவரின் மகள் தல்பியா.நேற்று சல்மா தனது மகளை டியூஷன் முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது,இவர்களது எதிர் வீட்டில் சங்கிலியால் கட்டிப் போட்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்று சங்கிலியை அறுத்துக் கொண்டு, ஓடி வந்து சிறுமியை கடித்து குதறியது.இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து இன்று உறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தின் நெல்லை, மதுரை, கோவை போன்ற இடங்களில் ஐபிஎல் ஃபேன் பார்க் எனப்படும் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இதனை ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர். இந்நிலையில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் போட்டிகளின் ஐபிஎல் பேன் பார்க்கானது திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மலைக்கோட்டைக்கு பின்புறம் உள்ள பட்ட வார்த்தை சாலையில் ரூ.4 கோடியில் புராதான பூங்கா பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.27 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த பூங்கா திடீரென்று முன்னறிவிப்பின்றி மூடப்பட்டு நேற்று இரவு வரை திறக்கப்படவில்லை. விடுமுறை நாட்கள் என்பதால் பெரியவர்களும் குழந்தைகளும் பூங்கா நுழைவு வாயிலில் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எலமனூர் மற்றும் வாத்தலை இடையே முக்கொம்பு தடுப்பணை அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆறு பிரிகிறது. இந்த அணையின் மூலம் டெல்டா பகுதியில் மூன்று லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக தடுப்பணையின் 41 சட்டர்களும் 17 கோடி மதிப்பீட்டில் முழுமையாக பழுது பார்க்கும் பணி தீவிரமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.