Tiruchirappalli

News May 2, 2024

திருச்சியில் அண்ணா சிலைக்கு காவி சாயம்

image

திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை கடைவீதியில் உள்ள அண்ணா சிலை மீது மர்ம நபர்கள் இன்று காலை காவி சாயம் பூசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசிய மர்ம நபர்களை பொன்மலை போலீசார் தேடி வருகின்றனர். அதே நேரம் அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசிய விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.சமீப காலமாக காவி சாயம் பூசும் மர்ம நபர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

News May 2, 2024

திருச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சிக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

திருச்சி அருகே மூன்று பேர் அதிரடி கைது

image

மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எஸ்ஐ சங்கர் தலைமையிலான குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாலாஜி நகர் பகுதியில் ஜவகர், தங்கதமிழ்செல்வன் , சரவணகுமார் ஆகிய மூன்று பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

திருச்சி:மாநில ஒருங்கிணைப்பாளர் ஆய்வு.

image

இல்லம் தேடி கல்வி மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்சி கீழரசன் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளியில் நடைபெறும் இ கே ஒய் சி பணியில் சந்தித்த சிரமங்கள் குறித்து தன்னார்வலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து காலை உணவு திட்டம் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.இந்த திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

News May 1, 2024

உழைப்பாளர் சிலையாக மாறிய மாணவர்கள்

image

மே தினத்தையொட்டி தொழிலாளர்களின்  உழைப்பை போற்றும் வகையில்,  உழைப்பாளர் சிலை போல் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே மாணவர்கள் நின்றனர். உழைப்பவர்களால் தான் இந்த தேசம் வலிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் ஆனால் உழைப்பாளர் சிலைக்கு தனி சிறப்பு உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்கள் நின்றனர்.

News May 1, 2024

சாலையில் கொட்டி கிடந்த ஆதார் அட்டைகளால் பரபரப்பு

image

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா திருவள்ளூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் சாலையில் கொட்டிக் கிடந்தன. இந்த ஆதார் அட்டைகளை அப்பகுதியினர் சேகரித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணையில் லால்குடிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஆதார் அட்டைகள் தவறி சாலையில் விழுந்திருக்கலாம் என தெரிவித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

News May 1, 2024

திருச்சியில் ஆதார் உள்ளீடு பயிற்சி.

image

திருச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 தன்னார்வலர்களுக்கு ஆதார் உள்ளீடு பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. எல்காட் நிறுவனத்தின் கருத்தாளர்கள் ராஜ்குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவு நாளான நேற்று மாவட்ட உதவி அலுவலர் அன்பு சேகரன் வாழ்த்தி பேசி தன்னார்வலர்களுக்கு ஆதார் உள்ளீட்டுக்கு தேவையான கருவிகளை வழங்கினார்.

News May 1, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.

image

தொழிலாளர் தினமான இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது .எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள மது கூடங்கள், வாணிபக் கழகத்தின் விற்பனை மது கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும் .இதனை மீறி விற்பனை செய்தால் ,கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

திருச்சி: சார்பு நீதிமன்றங்களுக்கு இன்று முதல் விடுமுறை

image

ஆண்டுதோறும் சிவில் நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் திருச்சி மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு இன்று முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் மகளிர் நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம், பி சி ஆர் நீதிமன்றம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றம் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

திருச்சி: ஊழியர் சஸ்பெண்ட்.!

image

திருச்சி நியாய விலை கடையில் மது அருந்திவிட்டு ரேஷன் பொருட்கள் வாங்க வந்த சசிகலா பெண்ணை தரக்குறைவாக பேசி,ரேஷன் கார்டை வீசி எறிந்த ஊழியர் நிஸாரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.இந்நிலையில் இன்று கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் துணைப்பதிவாளர் ராஜகுமார் ரேஷன் கடை ஊழியர் நிஸாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!