Tiruchirappalli

News July 29, 2024

பள்ளி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

image

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே இன்று மாலை ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதனை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்நிலையில் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், வெளியாட்களை அழைத்து வந்து மாணவனை வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற ஆசிரியர் சிவகுமாருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News July 29, 2024

முன்னாள் அமைச்சர் திருச்சி வருகை

image

திருச்சி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கரை சந்திக்க இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மற்றும் சி.வி சண்முகம் இன்று வருகை புரிந்தனர். அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் எம்பி குமார், முன்னாள் அரசு கொறடா மனோகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News July 29, 2024

மாணவர்களுக்கு சீருடை வழங்கிய ஆட்சியர்

image

திருச்சி கே.கே.நகர் தொடக்கப்பள்ளியில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறையின் மூலம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இணை சீருடையினை மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

News July 29, 2024

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: அமைச்சர் விமர்சனம்

image

திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை, நேரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தங்கமணி மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று தெரிவித்தார்.

News July 29, 2024

மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி

image

திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்துடன் இணைந்து மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டிகளை வயலூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் வலுதூக்கும் போட்டிகள் நடந்தன. பென்ச்பிரஸ் கிளாசிக் டெட்லிப்ட் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில், ஆண்கள் பிரிவில் 175 பேரும், பெண்கள் பிரிவில் 80 பேரும் கலந்து கொண்டனர். பின்பு, பரிசுகள் வழங்கப்பட்டன.

News July 29, 2024

அதிக விளைச்சல் பெற எளிய வழி

image

விதை மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, விதைகளின் தரத்தினை உறுதி செய்து கொள்ள, திருச்சி விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார், “தமிழகத்தில், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மிதமான மழை பொழியும். இந்த மாதங்கள் தான் விவசாயத்திற்கான மாதங்களாக கருதப்படுகிறது. விவசாயிகள் விதைகளை வாங்கும்போது, விதை பரிசோதனை நிலையத்தில் அவைகளில் தரம் அறிந்து பரிசோதித்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News July 29, 2024

கொலைகளுக்கு அரசை குறை கூட கூடாது: அமைச்சர் ரகுபதி

image

தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரசை கூறுவது ஏற்புடையதல்ல என திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுக ஆட்சியில் நடக்கும் சம்பவங்கள், அரசியல் குற்றச் சம்பவங்கள் அல்ல” என தமிழகம் கொலை மாநிலமாக மாறியுள்ளதாகக் கூறிய இ.பி.எஸ். கருத்துக்கு விளக்கம் அளித்தார். உங்கள் கருத்து என்ன?

News July 29, 2024

திருச்சி வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

image

அகமதாபாத்-திருச்சி இடையேயான வாராந்திர ரயில் சேவை ஆக.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக.1, 8,15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும். தொடா்ந்து ஜூலை 28, 4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

News July 29, 2024

திருச்சியில் அதிமுக பிரமுகர் உட்பட 8 பேர் கைது

image

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தாக்குவதற்காக நேற்று கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கரண், ராம், தினேஷ் உள்ளிட்ட 8 பேர் ஆயுதங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து அங்கு வந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீஸார் விசாரித்ததை தொடர்ந்து 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News July 28, 2024

அரசியலுக்கு வருவேன்: இயக்குநர் அமீர்

image

நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரை நிராகதித்ததைவிட, அதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பது வருத்தமாக உள்ளது. வாக்களித்தவர்கள், வாக்களித்தவர்கள் இருவருக்குமே அரசு ஒன்று தான். அப்படி எல்லா மாநிலங்கலையும் அரசு சமமாக பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

error: Content is protected !!