India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
திருச்சி கலைஞர் அறிவாலயம் பகுதியில் இன்று காலை மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து, கோட்டை காவல் நிலைய காவலர் அப்துல் காதர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்நிலையில் போலீசார் அண்ணாசிலை அருகே சென்ற போது மூன்று ரௌடிகளில் ஒருவன், அப்துல் காதர் வலது கன்னத்தில் வெட்டினான்.இதில் அவர் காயமடைந்தார்.இத்தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்யலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிவித்துள்ளார். எனவே விவசாயிகள் www.pmfby.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இரவு காவல் பணியில் அசால்ட்டாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 88 பேருக்கு வார்னிங் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாகும். இனியும் அலட்சியமாக இருந்தால் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் மாவட்டத்தை சுற்றி தீவிர சோதனை நடைபெற்றது. இதில், ஜூன் 25, 26, 27 ஆகிய தேதிகளில் அமைக்கப்பட்ட 8 குழுக்களின் மூலம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 56 கடைகளில் ஆய்வு நடத்தி, சுமார் ரூ.16,60,000 அபராதம் விதித்து சீலிடப்பட்டது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக சரித்திர பதிவேடு குற்றவாளி வினோத்குமார் மற்றும் இம்ரான்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் ரவுடி வினோத்குமார் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இம்ரான்கான் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், 2 இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
திருச்சி காந்தி மார்க்கெட் பால் பண்ணை பகுதியில் இன்று லாட்டரி சீட்டுகள் விற்றதாக கதிரவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதேபகுதியில், கார்த்திகேயன் என்கிற பேக் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக அர்ஜுன் என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் விறகுபேட்டை மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, மரக்கடை பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்த்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பெருட்கள் விற்பனை செய்த 56 கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.16.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான தமிழ்மொழி பயிற்சி, நூல் விமர்சனம் மற்றும் ஓவிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது, வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கும் சிறார்கள் குறிப்பேடு மற்றும் ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் எடுத்து வர வேண்டும்.
Sorry, no posts matched your criteria.