India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறை பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட உள்ளது. இந்த வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்ப படிவம் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள பர்சனல் அசிஸ்டன்ட் ஆபிஸர் தேர்வு, ஜூலை 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3,370 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 3 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்கள் என மொத்தம் 5 காவலர்கள் கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஜூன்-2024ம் மாதத்திற்கு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற, தகுதியான குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதம் முழுவதும் பாமாயில், துவரம்பருப்பு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குருப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. மேலும் இந்த தேர்வானது வரும் 14.9.2024ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை போட்டி தேர்வுகள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கட்டணம் இல்லா இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 8.7.2024ம் தேதி காலை 10 மணிக்கு துவங்க உள்ளது என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையினை பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் தேவை. தகுதி உள்ளவர்கள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் இன்று பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில், பொதுமக்கள் நேரில் வந்து கொடுத்த 53 மனுக்களுக்கு உரிய தீர்வு காண, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு மனுக்களை மாநகர காவல் ஆணையர் அனுப்பி வைத்தார்.
புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர் அபினேஷ் CLAT தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதையடுத்து திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஏ எல் எல் பி படிக்க மாணவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாணவருக்கு ரூ.20,000 க்கான காசோலையை வழங்கினார். மேலும் அதை மாணவரிடம் உதவி திட்ட அலுவலர் அன்புசேகரன் நேற்று வழங்கினார்.
ஆதிதிராவிடர் நல துறையின் கீழ் செயல்படும் துறையூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள 1 பொருளியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளது. எனவே இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் துரைவைகோ, அருண்நேரு, ஜோதிமணி, முரசொலி மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேற்று வழங்கினர். இதற்கு அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.
திருச்சி ரயில்வே கோட்ட நிறுவனம் நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மானாமதுரை-ராமநாதபுரம் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மானாமதுரையோடு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மானாமதுரையோடு ரத்து செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.