India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கும் , சென்னைக்கும் தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் வந்தே பாரத் இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று நம் பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் சென்றடைந்தார். இதனை அடுத்து கோவிலில் இன்று வருடத்திற்கு ஒருமுறை நிகழும் சேர்த்தி சிறப்பு சேவை நடைபெற்றது. இதனை ஒட்டி நம் பெருமாள் மற்றும் கமலவல்லி நாச்சியார் இருவரும் இணைந்து கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.
திருச்சி சிறுகனூர் பகுதியில் திருச்சி மக்களவை தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதை முன்னிட்டு உரையை தொடங்குவதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன், பெரியார் மற்றும் அண்ணா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் உரை நிகழ்த்தினார்.
திருச்சி மாவட்டத்தில் திமுக பிரச்சாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினர் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இன்று திருச்சியை நோக்கி படையெடுத்து வந்தனர். இதையடுத்து பிரச்சார திடலில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் தொண்டர்களால் ஆக்கிரமிப்பு செய்து சிறுகனூர் பகுதி முழுதும் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சி சிறுகனூரில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு , திமுக என்றென்றும் இளைஞர்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் இயக்கம் என்றும் பெரம்பலூர் தொகுதியின் வெற்றியை முதல்வருக்கு சமர்பிப்பேன் என உறுதியளித்தார். நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை சிறுகனூரில் ஆதரித்து பேசுகிறார். இதை முன்னிட்டு பிரச்சார கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி படத்துடன் மயில் தோகை போன்ற இறக்கையுடன் பெண்கள் நடனம் ஆடி பொதுமக்களை கவர்ந்தனர்.
திருச்சியில் மார்ச் 24ஆம் தேதி அ.தி.மு.க (ம) கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி அவர்களால் சூறாவளி பிரச்சாரம் தொடங்க உள்ளது. இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இந்த பிரச்சாரம் திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்,தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுயது:திருச்சியில் 2547 வாக்குச்சாவடி மையம் உள்ளது.3053 வாக்குப்பதிவு இயந்திரம்,3053 கட்டுப்பாட்டு கருவிகள்,3037 விவிபேட் உள்ளன.மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. திருச்சியில் நேற்று மாலை வரை ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இன்று காலை ரூ15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருச்சி மாநகர காவல் துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், சந்தேகத்திற்குரிய போலியான இணைப்புகள் மூலம் வரும் லிங்குகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் இது இணையத்தில் மோசடி செய்பவர்கள் மூலம் உங்கள் எஸ் எம் எஸ் மற்றும் கேமரா போன்ற தொடர்புகளை அணுகி நிதி இழப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், திருச்சியில் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.