India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணப்பாறை முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்சோதி, சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வுக்கான மாதிரித் தேர்வு நாளை காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. கலந்து கொள்பவர்கள் குறிப்பெடுக்க அவசியம் நோட்டு கொண்டு வர வேண்டும். மாதிரி தேர்விற்கு கட்டணம் ஏதும் இல்லை.ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெ றும். தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலட்சுமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே திருச்சி – கரூர் செல்லும் புறவழிச்சாலையில் காமநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் லாரியில் இருந்த ரூ.50 லட்சத்தைத் கொள்ளையடித்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற போஸ் , திருநெல்வேலி நாங்குநேரியைச் சேர்ந்த வெள்ளத்துரை மேலும் சிலரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு இணைந்து திருச்சி தனியார் பள்ளியில் “திருச்சியே திரும்பி பார்” எனும் மாபெரும் நாட்டு விதை திருவிழாவை இன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதைகளை பார்வையிட்டார்.
மணப்பாறை அருகே பொம்மம்பட்டியை சேர்ந்த சுரேஷ் – ஜமுனா ராணி (24) தம்பதி. இவர்களுக்கு இவர்களுக்கு மேகாஸ்ரீ என்ற மகள் உள்ளார். ஜமுனா ராணி தனது மகள் மேகாஸ்ரீயுடன் நேற்று கிணற்றில் குளிக்க சென்ற நிலையில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலங்களை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொட்டியம் ஒன்றியம் மேலகாரைக்காடு ஒன்றிய துவக்கப் பள்ளியில் எஸ்.எம்.சி புதிய பொறுப்பாளர்கள் தேர்வு இன்று நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமை வகித்தார். மேலும் பார்வையாளராக ஆசிரியப் பயிற்றுனர் மதுமதி கலந்து கொண்டார். 2024 – 26க்கான புதியதாக பள்ளி மேலாண்மை குழு தலைவராக இலக்கியாவும், துணைத்தலைவராக சங்கீதா உள்ளிட்ட 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதி மொழி ஏற்றனர்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சென்றனர். ஆனால் அதுபோன்ற முகாம் நடைபெறவில்லை என்றும், அது வெறும் வதந்தியே! என்று அறிவிக்கப்பட்டதால் பெண்கள் ஆத்திரமடைந்தனர். மேலும், வாட்ஸ்அப்பில் பரவி வரும் மகளிர் உரிமைத்தொகை புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி கே.கேநகரில் இன்று சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டல ஐஜி, டிஐஜி,கமிஷனர்,எஸ்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருச்சியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில், ரவுடி பட்டியலை எடுத்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.
வளநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஏர்கன் வைத்து பறவைகளை வேட்டையாடி உள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை எஸ்.ஐ லியோ ரஞ்சித், காவலர்கள் மணிகண்டன், வீரபாண்டி, ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் ரூ. 1.25 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் நேற்று முன்தினம் எஸ்பி வருண் குமார் அதிரடி நடவடிக்கையாக நால்வரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். SHAREIT
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னால் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.