Tiruchirappalli

News July 31, 2024

குறும்பட காணொளியில் நடித்த மாணவிகளுக்கு பாராட்டு 

image

திருச்சியில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகள் நடித்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்பட காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த குறும்பட காணொளியில் நடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேர்தல் ஆணையம் சார்பில், பாராட்டு சான்று விருதினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News July 31, 2024

மாணவர்களின் ரீல்ஸ் மோகம் – எச்சரிக்கை

image

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் சமீபத்தில் 2 இளைஞர்கள் கல்லூரி மாணவிகள் முன்பு சாலையில் பல்டி அடித்து ரீல்ஸ் வெளியிட்டனர். பின்னர், 2 மாணவிகள் பேருந்தில் ஏறுவது போல் சைகை காட்டி விட்டு பின்னர் ஏறாமல் ஏமாற்றி விட்டு சென்றது போன்ற ரீல்ஸ் வெளியானது. இந்நிலையில், 2 கல்லூரி மாணவர்களை கோட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

News July 31, 2024

முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் 

image

துறையூர் பச்சமலையில் நாளை (ஆக.1)  இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் அறிவுரை வழங்கினார்.

News July 31, 2024

மீண்டும் எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்

image

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இன்று முழுமையாக நீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால், கரையோர பகுதிகள், ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ பொது மக்களுக்கு அனுமதி இல்லை. மேலும்,கரையோரங்களில் இருந்து செல்பி எடுக்கவும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 31, 2024

தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை

image

திருச்சி 31.இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, பெங்களூரு,ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி வருகிறது. இன்று 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500-க்கு விலை போனது. அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளி சில்லரை விலையில் ரூ.20 விற்கப்படுகிறது. வியாபாரி கூறும்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது என தெரிவித்தார்.

News July 30, 2024

பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட பாதுகாப்பு குறுஞ்செய்தி

image

மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நீர் திறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. 

News July 30, 2024

நாளை மாநில அளவிலான டென்னிஸ் இறுதி போட்டி 

image

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் திருச்சி கேந்தரிய வித்யாலயா சார்பில் 53-வது மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்று வரு கிறது. இந்த போட்டி வருகிற 31-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 15 பள்ளிகளில் இருந்து 65 பேர் கலந்து கொள்கிறார்கள். இதன் இறுதி போட்டி நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

News July 30, 2024

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூரில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் மாயனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், தொட்டியம் மற்றும் காடுவெட்டி, ஸ்ரீ ராமசமுத்திரம், திருநாராயணபுரம், சீலை பிள்ளையார் புத்தூர், நத்தம் போன்ற காவிரி கரையோர பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொட்டியம் பேரூராட்சி சார்பில் இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News July 30, 2024

மீனவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் தமிழக அரசு: எம்எல்ஏ

image

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான தின உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்றும், இதன் மூலம் சாமானிய மக்கள் மீதான தனது மனிதாபிமானத்தை திமுக அரசு மீண்டும் நிலைநாட்டியுள்ளது எனவும், மீனவர்களுக்கு உற்ற பாதுகாவலனாக இருக்கும் தமிழக அரசுக்கு நாம் அரணாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வென்ற  திருச்சி அணி 

image

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி மதுரையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில் திருச்சி, உறையூர் எஸ்.எம்.பள்ளியும், ராஜபாளையம் பள்ளியும் மோதின. இதில்,  எஸ்.எம்.பள்ளி அணி 25-17, 27-25 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

error: Content is protected !!