India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (18) இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு நேற்று தண்ணீர கேட்பது போல் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இளம் பெண் சத்தம் கேட்டு பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் வாலிபர் தப்பி ஓடினார்.புகாரின் பேரில் கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் தானியங்கி தொழில்நுட்ப தொழில்துறை ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் கணேசன் தலைமையிலும் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், சென்னை பல்கலை கழக துணை வேந்தர் ராஜ் திறந்து வைத்தார். தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அவர்களை ஆதரித்து திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தென்னூர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் அமைச்சர் நேரு இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்ட மேலாளர் அலுவலகம் மக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரயில் நிலையங்களில் அல்லது ரயிலில் பயணிக்கும் போது பயணிகளுக்கு உண்டாகும் பாதுகாப்பு குறைபாடு, ரயில் நிலையத்தின் மீது புகார் அளிக்க, மருத்துவ உதவி தேவைக்கும், ரயில் தாமதம் குறித்து ரயில் மீது கம்ப்ளைன்ட் என அனைத்து பிரச்சனைகளுக்கும் 139 எண்ணை அழைத்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப்குமார் அவர்கள், இன்று நான்கு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆட்சியருடன் பேரணியை தொடங்கி வைத்தனர்.
திருச்சி, துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதியில் கணவன் மனைவி இருவரை மர்ம நபர்கள் கடந்த ஆண்டு படுகொலை செய்தனர். இது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்ததில் குற்றவாளிகளை இன்று வரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த கொலை குறித்து தகவல் அளிக்க 9363668900 தொலைபேசி எண்னை காவல் துறை வழங்கியுள்ளது.
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாக திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக 50க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேஷ், திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியர்கள் அதிகமாக உள்ளதாக இன்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பெல், OFT, HAPP, உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை என்றும், நாம் தமிழருக்கு ஆதரவளித்தால் பெரும் போராட்டம் நடத்தி இதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.
திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் மேல அம்பிகாபுரம் ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளிட்ட திருச்சியில் பிரதான கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலை புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திரளான கிறிஸ்தவர்கள் தங்களது பங்கு கோயில்களுக்கு சென்று வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 3 லட்சத்து 45ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.