India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திமுக ஆட்சியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை காணவில்லை எனக்கூறி, வடிவேல் படத்தை பதிவிட்டு அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பைத் தடுக்க, சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம், தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை விமர்சித்து அண்ணாமலை X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் நாமக்கல்லை சேர்ந்த கவிதா தனது தாயான லோகலட்சுமி என்பவரை திருச்சி விமான நிலையம் அழைத்துச் செல்ல காரை நாமக்கல் முத்துவேல் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி முக்கொம்பு அருகே வந்த அரசுப் பேருந்து கார் மீது மோதியது. இதில், லோகலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கவிதா, முத்துவேல் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துறையூர் சின்னஇழுப்பூரில் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் தேர்வாகியுள்ள பழங்குடியினர் மாணவி ரோகினியை, அவரது இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கல்வி சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல்லும்படி அறிவுரை வழங்கினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
துறையூர் பச்சைமலை பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2 புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கும் அமைச்சர்களுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள மின்சார டவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. டவர் இடிந்து விழும்போது கொள்ளிடம் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரும்பு சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை, திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும், போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால் ஆகஸ்ட் 3ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 4ஆம் தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க செல்லும் நபர்கள் காவிரியில் இறங்கி நீராட தடை செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தை கரையின் அருகிலுள்ள அழகியபுரம் கிராமத்தில் 200 மீட்டர் தொலைவில் சாய்க்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து மின் கோபுரத்தில் குழிதோண்டி கயிறு கட்டும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் திருச்சி மாநகர் தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 150 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.