India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அதியமான் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களின் சார்பில் வரும் செப்.7ஆம் தேதி அன்று கொள்ளிடம் பாலம் அருகே, கொள்ளிடம் தடுப்பணை தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், முன்னாள் எம்பி ப.குமார் முன்னிலையில் நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருச்சி என்ஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக விடுதி காப்பாளர் பேபி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவியிடம் ஆடை குறித்து தரக்குறைவாக பேசியதால், என்ஐடி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பேபியை தொடர்ந்து மற்ற 2 விடுதி காப்பாளர்கள் சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியோர் ராஜினாமா செய்யவுள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (50) என்பவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கடைவீதி பகுதிக்கு சென்றார். அப்போது, ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த குருபரன் (20) தனது இரு சக்கர வாகனத்தை முன்னாள் சென்ற பாஸ்கர் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் வருகிற 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிலை வைக்கப்படும் இடம் தனியார் அல்லது மாநகராட்சி அல்லது அரசாங்க இடமாக இருந்தால் உரிய அனுமதி கடிதம் பெற்று வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் கொளக்குடி, குணசீலம், பூவலூர், வேங்கைமங்கலம், அபிஷேகபுரம், காட்டுப் புத்தூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (31.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கொளக்குடி, குணசீலம், பூவலூர், வேங்கைமங்கலம், அபிஷேகபுரம், காட்டுப் புத்தூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (31.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் அமைந்துள்ள தேசிய பள்ளி மைதானத்தில் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06037) வேளாங்கண்ணிக்கு 01-09-2024 (ஞாயிற்றுக்கிழமை) 23:50-க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பயணிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் இந்த ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் 2 ஆம் தேதி இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ரத்து செய்வதால் பயணிகள் அவதியடைவார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 23 லட்சத்து 3 ஆயிரத்து 177 வாக்காளர்கள் உள்ளனர். 2,547 வாக்குச்சாவடிகளும், 1,155 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ, பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ, கட்டடம் மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உரிய விண்ணப்பம் அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.