Tiruchirappalli

News September 4, 2024

திருச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு

image

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள அப்பிரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 550 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 20 முதல் 28 வயது உள்ளவர்கள், https://www.iob.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு விண்ணப்பிக்க கடைசி 10.09.2024. கடைசி நாளாகும்.

News September 4, 2024

கல்வெட்டுகளை ஆராயும் தொல்லியல் துறை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மற்றும் மணச்சநல்லூரில் கோயில்களின் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை நகலெடுக்கும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. திருவாசியில் உள்ள மேட்டுறை வரதேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் தாலுகாவில் பெரிய கருப்பூர் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோயில் சுவர்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் நகல் எடுக்கப்பட்டு வருவதாக கல்வெட்டு நிபுணர் சாருமதி தெரிவித்தார்.

News September 3, 2024

திருச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

image

திருச்சி மாநகரத்தில் வரும் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 9ஆம் தேதி சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளதை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்புடன், எந்த பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் கொண்டாடும் வகையில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் தொடங்கி இந்த அணி வகுப்பு உறையூர் காவல் நிலையத்தில் முடிவுற்றது.

News September 3, 2024

கல்லூரி மாணவர்களுக்கான விநாடி – வினா போட்டி

image

திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் சார்பில், மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி, கல்லூரி மாணவர்களிடையே விநாடி-வினா போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என அகில இந்திய வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.

News September 3, 2024

திருச்சியில் ஜேசிபி மோதி ஒருவர் பலி

image

சிறுகனூர் அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரும், தனது இரு சக்கர வாகனத்தில் கன்னியாகுடி பகுதிக்கு சென்று விட்டு வரும் போது ஸ்ரீபெரம்பத்தூர் கோழிப் பண்ணையிலிருந்து வெளியே வந்த ஜேசிபி வாகனம் மீது மோதிய விபத்தில் கருப்பையா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவர் கூட வந்த நபர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 3, 2024

திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலையரங்கத்தில் வரும் 06.09.24 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.

News September 3, 2024

திருச்சியில் 9 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் கடத்தல்

image

கோலாலம்பூரிலிருந்து AK 29 விமானம் மற்றும் ஷார்ஜாவிலிருந்து IX614 விமானம் மூலம் இன்று திருச்சிக்கு வருகை தந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இரண்டு பயணிகளை தடுத்து நிறுத்தி, 200 அட்டைப்பெட்டிகளில் அவர்கள் கொண்டு வந்திருந்த சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 9,43,000 ரூபாய் ஆகும். தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

News September 3, 2024

ஸ்ரீரங்கம் கோயில் விவகாரம்: நீதிபதி உத்தரவு

image

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பிரசாத வழக்கில் பிரசாதங்களை அறநிலைய துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக்கூடாது” என்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு நேற்று பிறப்பித்துள்ளார். மேலும் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் கோயில் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

திருச்சியில் நாளை மாநில அளவிலான கருத்தரங்கம்

image

திருச்சி பாரதிதாசன் பல்கலை., வளாகத்தில் நாளை (செப்.4) “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனத் தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பாக செயல்புரிந்த கல்லூரிகளுக்கும், மாணவர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News September 3, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் வரும் 6ம் தேதி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொலை பேசி எண் 04312413510 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!