Tiruchirappalli

News September 16, 2024

தம்பதி தீக்குளிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் பரபரப்பு

image

திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மீன் வியாபாரி. இவரது மனைவி செல்வி இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் மதியழகன் கார் வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டு வருகிறார். மதியழகனுக்கும் பாண்டியனுக்கும் வீட்டு விசயத்தில் பிரச்சனை ஏற்பட பாண்டியன் காவல் நிலையம், கலெக்டர் அலுவலகம் என்று பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிப்பு சம்பவத்தில் இறங்கியுள்ளனர்.

News September 16, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

News September 16, 2024

திருச்சியில் போலீசாரை தடுத்த இளம் பெண் கைது

image

திருச்சி கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, பாலக்கரை சேர்ந்த கிரிஜா என்ற இளம்பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கைது செய்து நேற்று திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே காவல் ஆய்வாளர் ஒருவர் மீது பாலியல் புகார் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. கருத்துக்களை பதிவிடவும்

News September 16, 2024

கல்லணையில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை உடல் மீட்பு

image

திருச்சி பத்தாளப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், திருவெறும்பூர் அடுத்த கல்லணை கால்வாயில் நேற்று மகளுடன் குளிக்கச் சென்றார். அப்போது இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் உடலை போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலூரில் சுரேஷின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 16, 2024

அரியமங்கலத்தில் விரைவில் பயோ கேஸ்

image

அரியமங்கலம் குப்பை கிடங்கில் 1 நாளைக்கு 100 டன் காய்கறிகள், இறைச்சிகள் மற்றும் இதர கரிம கழிவுகளைக் கொண்டு உயர் அழுத்த இயற்கை எரிவாயு (பயோ சிஎன்ஜி) தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக மத்திய அரசு ஸ்வச் பாரத் மிஷின் 20 திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அக்டோபரில் தொடங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கருத்துக்களை பதிவிடவும்

News September 16, 2024

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் அறிக்கை

image

அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முசிறி MIT வேளாண்மை கல்லூரி விழாவிற்கு வருகை தர உள்ளார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கழக நிர்வாகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News September 15, 2024

கல்லணை கால்வாயில் தந்தை மகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்

image

திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று மதியம் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு பத்தாளபேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளித்தபோது, அவரது மகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக சுரேஷ் தண்ணீரில் இறங்கியதில் சுரேஷும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

News September 15, 2024

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

திருவெறும்பூர் அருகே உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது உதவி பொறியாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி B.E, B.TECH தேர்ச்சி, வயது வரம்பு 36வயது ஆகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

திருச்சியில் திருமாவளவன் பதிலடி

image

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

News September 15, 2024

திருச்சியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

ஸ்ரீரங்கம், சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 27ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லுரியில் சேர மாணவர்கள் நேரில் சென்று ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புக்கு 95974 76719, 82482-52577, 73739-05151, 90424-18693, 98423-16326 என்ற எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!