India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணப்பாறை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முகேஷ் மற்றும் பாசிக் நேற்று இரவு விராலிமலை சாலையில் டூவீலரில் அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அரசமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பாசிக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவர் புதுத்தெரு பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கட்டிடத்தில் படியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணக்கம்பட்டி சென்று விட்டு இன்று அதிகாலை 10 பேருடன் வீடு திரும்பி கொண்டிருந்த மினி வேன் எதிர்பாராத விதமாக புத்தாநத்தம் அடுத்த வெட்டுக்காடு அருகே போஸ்ட் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தர். ஓட்டுனர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்த புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தநல்லூரைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியே மது போதையில் வந்த சிலர் சிறுவர்களை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிறுவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த போலீசார் அண்ணாநகர் பகுதியில் சென்று விசாரித்தபோது, தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பியோடிவிட்டதாகத் தெரியவந்ததால் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வேயிடம் நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 03.11.2024 பிற்பகல் 03.00 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட இருக்கிறது. நம் கோரிக்கையை ஏற்று சிறப்பு இரயில் அறிவித்த தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவிப்பதாக திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவரும், திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் மனைவியான வந்திதா பாண்டேக்கு மத்திய அரசின் விருது கிடைத்ததற்கு, எஸ்பி வருண்குமார், திரள் நிதியும் திருடர் கூட்டமும் சாதி வெறி இணைய கூட்டமும் புகைப்படத்தை மார்பிங் செய்து மகிழ்ச்சி அடைந்த நிலையில், நீ உன் செயலால் சிங்கப் பெண்மணியாக பெண் குழந்தைகளுக்கு எதிரானவர்களை போக்ஸோவில் அடைத்து சாதித்தாய் என வர்ணித்து வாழ்த்தினார்.
முசிறி சாலியர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (40). இவர் இன்று மதியம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென முத்துலட்சுமியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் முத்துலட்சுமி சுருண்டு கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் முத்துலட்சுமியை முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முத்துலட்சுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
துவரங்குறிச்சி மோரணிமலை அருகே எஸ்ஐ தனேஷ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, டூவீலரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிதிரிந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த பார்த்தசாரதியை பிடித்து விசாரணை செய்ததில் கடந்த 28ஆம் தேதி தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறித்து சென்றவர்கள் என தெரியவந்ததை தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தண்டலைப்புத்தூரை சேர்ந்த வைரமுத்து, அடிக்கடி மது அருந்தியதால் அவரது மனைவி கடந்த 20 நாட்களாக தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது மகன் இது குறித்து வைரமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டபோது கடப்பா கல்லை எடுத்து வைரமுத்துவை தாக்கியுள்ளார். தலையில் காயம் அடைந்த வைரமுத்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனை அடுத்து முசிறி போலீசார் நேற்று கலைச்செல்வனை கைது செய்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நாளான இன்று 28 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.