India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையை சேர்ந்த ஷேக் மொய்தீன், இவர் துபாய் செல்வதற்காகவும், தஞ்சாவூரை சேர்ந்த வெள்ளையம்மாள் இவர் சிங்கப்பூர் செல்வதற்காகவும் சிவகங்கையை சேர்ந்த திருநாவுக்கரசு, ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது மொய்தீன் ஆகியோர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்கள் போலி ஆவணம் கொடுத்து பயணம் செய்தது தெரியவந்தது. ஏர்போர்ட் போலீசார் நால்வரையும் கைது செய்து விசாரணை செய்கின்றனர்.
தொட்டியம், பூவாளூர், காட்டுப்புத்தூர், துவாக்குடி, கொளக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், கிழிஞ்சநத்தம், பாலசமுத்திரம், கொளக்குடி, எம் புத்தூர், நத்தம் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை ஆவடி மாநகராட்சியை தொடர்ந்து, திருச்சியிலும் மீட்டர் மூலம் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் வழங்கப்பட உள்ளது. திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மணப்பாறை சிப்காட் தொழிற்சாலை போன்ற அனைத்து திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் & சேஷசாயி தொழில் நுட்ப பயிலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (30-11-24) அன்று அரியமங்கலம் சேஷசாயி தொழில் நுட்ப பயிலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தத்தமங்கலத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வடக்கு தெரு தளுதாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அனந்த் என்பவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டி, மடக்கு சக்கர நாற்காலி, செயற்கை அவயங்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் அளவீடு செய்து வழங்க உள்ளது. இதற்கான முகாம் 26ஆம் தேதி துறையூர் அரசு பள்ளியிலும், 27ஆம் தேதி திருவெறும்பூர் அரசு பள்ளியிலும், 28ஆம் தேதி லால்குடி அரசு பள்ளியிலும், 29ஆம் தேதி மணச்சநல்லூர் அரசு பள்ளியிலும் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். ஷேர் செய்யவும்
மணப்பாறை அருகே உள்ள ஆனாம்பட்டியைச் சேர்ந்த சந்திரா என்பவர் நேற்று அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, தனி நபருக்கு சொந்தமான கிணற்றுக்குச் செல்லும் வயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்று திறனாளி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் <
திருச்சி அரியமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறுவர்களை கைது செய்தனர். பின்னர், 2 சிறுவர்களையும் இன்று ஜாமீனில் விடுவித்தனர்.
Sorry, no posts matched your criteria.