India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புள்ளமங்கலத்தில் பள்ளி வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர் மண்டை உடைப்பு. புள்ளமங்கலம் அரசு பள்ளிக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு வந்த வாகனங்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் ஓட்டுநருக்கு ஆசிரியருடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டது, இதில் ஒப்பந்த மேலாளர் மற்றும் ஓட்டுநர், ஆசிரியரை கம்பியால் தாக்கியுள்ளார். அடிபட்ட ஆசிரியர் மருத்துவமனை சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேலும் இந்த கூட்டத்தில் அரசு விதிகளுக்கு உட்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை 18/9/24 அன்று மாணவ மாணவிகளுக்கான சிலம்பம், கால்பந்து மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகளும் மற்றும் பொதுமக்களுக்கான கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை தினமும் காலை 8 மணி முதல் இரவு 5 மணி வரை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஞாயிறு தோறும் ஆதார் சேவை செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அறிவுறுத்தல்படி, தந்தை பெரியாரின் பிறந்தநாளில் (செப்.17) மாவட்ட முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமுகநீதி நாள் உறுதிமொழியினை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் தமுஎகச பொதுச்செயலாளர் களப்பிரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் உலக திரைப்பட விழா 18-ஆம் தேதி துவங்கி 22-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் கலை இலக்கிய ஆர்வலர்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 419 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை பல்வேறு நாட்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன அனைத்து நிகழ்வுகளும் அமைதியான முறையில் நடந்து. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3000 காவலர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எஸ்.பி. ஜெயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் தனித்திறன்கள் அடிப்படையில், சிறந்த மாணவர்கள் தேர்வுசெய்து காமராஜர் விருது மற்றும் பரிசு தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து இன்று ஆட்சியர் சாரு ஸ்ரீ மாணவர்களுக்கு காமராஜர் விருதுகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு நலவாரிய கல்வி உதவித் தொகைக்கான காசோலையை ஆட்சியர் சாரு ஸ்ரீ பயனாளிகளிடம் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உடனிருந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 17ஆம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அரசு உரிமம் பெற்ற மதுபான கடைகள் மது கூடங்கள் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்திருக்கிறார். நாளை ஒரு தினம் அனைத்து கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடியிருக்க வேண்டும் எனவும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.