Thiruvarur

News May 17, 2024

திருவாரூர்: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

திருவாரூரில் கனமழை முதல் அதிகனமழை

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News May 16, 2024

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

image

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 15/5/24 அன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.

News May 16, 2024

திருவாரூர்: ஆசிரியர் வேலைக்கு WAIT பண்றீங்களா!

image

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் மன்னார்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 18.05.24 (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மன்னார்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர்.

News May 16, 2024

திருவாரூரில் பெய்த மழை அளவு விவரம்.

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மன்னார்குடியில் 13 செ.மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 6 செ.மீட்டரும், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, குடைவாசல் ஆகிய பகுதிகள் 5 செ.மீட்டரும், வலங்கைமானில் 4 செ.மீட்டரும், திருவாரூர், திருவாரூர் AWS ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

News May 16, 2024

தெப்பத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

image

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் நேற்று(மே 15) திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் (பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலருமான சண்முகநாதன் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார். தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

News May 16, 2024

திருவாரூர் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

திருவாரூரில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

நன்னிலத்தில் ஆன்லைன் மோசடி!பணத்தை மீட்ட சைபர் போலீஸ்

image

நன்னிலம் தாலுகா பணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கோவிந்தசாமி என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பி, அவரிடமிருந்து OTP பெற்று வங்கி கணக்கிலிருந்து ரூ.18,561ஐ திருடியுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையில் கொடுத்த புகாரின்பேரில் ஜார்கண்ட் மாநில வங்கியிலிருந்து பணத்தை திரும்ப பெற்று போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

News May 15, 2024

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் மாநில நிர்வாகிகள் கூட்டம்

image

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடி சோழா மஹாலில் வரும் 17.05.24 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவரும், தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.