India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, ஆகிய ஊர்களுக்கு 295 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருவாரூரில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. அதில் 37,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்திட நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாத இயல்பான மழை அளவு 151 மில்லி மீட்டர் பெய்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரத்து 912 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்ட காப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், விடுபட்ட கிராமங்களுக்கு காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டிருக்கிறார். இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் என்ற விவசாயி. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த விபத்தில், இடுப்புக்கு கீழே செயல் இழந்து உதவி தொகைக்கு விண்ணப்பம் செய்து இருந்தார். இந்நிலையில் உணவுக்கே சிரமம் அடையும் அவர், என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என கூறி நேற்று திருவாரூர் கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ரோந்து காவல் பணிக்காக விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (26.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்த உபகரணங்கள் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்து வரும் நபர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், அரசாணை எண் 149 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதி 177 உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பாக 300 க்கும் மேற்பட்டோர் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உள் விளையாட்டு அரங்க வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் விளையாட்டு வீரர்களுக்கான தமிழக அரசின் சார்பில் விலையில்லா அனைத்து வகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.