Thiruvarur

News October 20, 2024

கிருஷ்ணகிரிக்கு 2000 டன் நெல்

image

நீடாமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை, நவீன சேமிப்பு கிடங்கில் சேகரித்து அங்கிருந்து லாரிகள் மூலம் நீடாமங்கலம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியோகத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. நேற்று இரவு கிருஷ்ணகிரிக்கு 42 வேகன்களில் 2000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

News October 20, 2024

மன்னார்குடியில் புதிய ஆர்டிஓ நியமனம்

image

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த கீர்த்தனா மணி தற்போது சிவகங்கைக்கு மாற்றப்பட்ட காரணத்தால், நாகையில் பணிபுரிந்து வந்த யோகேஸ்வரன் மன்னார்குடி புதிய வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 20 முதல் ஆர்டிஓவாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 19, 2024

திருவாரூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் அறநிலையத்துறை சார்பில் 21 ஆம் தேதி 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற உள்ளது. இவர்களுக்கு சீர்வரிசை அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கோவில் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர். திருமணம் நடைபெறும் இடமான ராஜகோபாலசாமி கோவில் ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

திருவாரூர் மாவட்டம் குறித்த முக்கிய தகவல்கள்

image

திருவாரூர் மாவட்டம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி, நாகை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 2,274 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட திருவாரூர் மாவட்டத்தில் 9 தாலுகா, 573 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 13 லட்சம் ஆகும். திருவாரூர் மாவட்டம் என்றால் உங்களுக்கு ஞாபகத்திற்கு வருவது என்ன? SHARE NOW!

News October 19, 2024

திங்கள் கிழமை முதல் ரேஷன் கடைகள் இயங்காது

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாக்பியா சங்கம் அறிவிப்பு நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அங்காடிகளில் பல மடங்கு அபராதம் விதிக்கப்படுவதை கைவிட வேண்டும் விற்பனையாளர்கள் பல மயில் தூரம் பணிபுரிவதை மாற்றம் விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி 21-10-2024முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

News October 19, 2024

திருவாரூர் அருகே நான்கு பேர் கைது

image

மன்னார்குடியை அடுத்த கீழ திருப்பாலக்குடி வாழ்முனிஸ்வரன், மேலதிருப்பாலக்குடி மதுரை வீரன் ஆகிய கோயில்களில் உள்ள உண்டியல்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பின்னர், வாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பிரபாகரன் (30), முத்து (22), அஜித் (20), ராஜேஷ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்தை கைப்பற்றினர்.

News October 18, 2024

கால்நடை வளர்ப்போருக்கு மாவட்ட நிர்வாகம் தகவல்

image

மழைக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் வழிமுறைகளை அளித்துள்ளது. அதன்படி, கால்நடைகளுக்கு நோய்தடுப்புசீகளை சரியாக செலுத்த வேண்டும். மழையின் போது கொட்டகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுதல், சுத்தமான குடிநீர், அடர்தீவனம் உள்ளிட்டவை சரியாக வழங்கப்பட வேண்டும் என்றும், மழைக்காலத்தில் இறக்கும் கால்நடைகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

News October 18, 2024

திருவாரூர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் இன்று தமிழ்நாடு தொழில்துறை மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 18, 2024

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்

image

நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்காக பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News October 18, 2024

வேளாண் மண்டலங்களில் தொழிற்சாலை வருவது தவறில்லை

image

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா  “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் வருவது எந்த விதத்திலும் தவறில்லை. வளர்ச்சியடைந்த பகுதியாக மேலும் உயர்த்துவதற்கு இந்த தொழிற்சாலைகள் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!