Thiruvarur

News October 30, 2024

முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் முன்னாள் அமைச்சர்

image

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திருவாரூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டார். பின்னர் முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

News October 30, 2024

திருவாரூர் வழியாக சிறப்பு ரயில்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக இரயில்வே சிறப்பு ரயில் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 5.00 மணிக்கு தாம்பரத்திலிருந்து ரயில் புறப்பட்டு இரவு 10.50க்கு திருவாரூர் வந்து சேரும். மறுநாள் (அக் 31) வியாழன் காலை 11.45க்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு திருவாரூர் மதியம் 3.50க்கு வந்தடையும். மேலும் இந்த ரயில் தாம்பரம் இரவு 11.10க்கு சென்றைடையும். உங்கள் வெளியூர் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News October 30, 2024

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

image

நீடாமங்கலம் அடுத்த ஒளிமதி கிராமத்தை சோ்ந்தவா் குமாா் (எ) ஆண்டெனி. கூலித் தொழிலாளியான இவா், நேற்று முன்தினம் இரவு நீடாமங்கலத்தில் பணி முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது ஒளிமதி மாரியம்மன் கோயில் அருகே எதிரில் வந்த மோட்டாா் சைக்கிள் ஆண்டெனியின் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 29, 2024

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (29.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 29, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

‘சிறுக கட்டி பெருக வாழ்’ எனும் பொன்மொழிக்கேற்ப நாளை (அக்.30) உலக சிக்கன தினத்தை முன்னிட்டு சிறுவர்கள், பெரியவர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் புரிபவர்கள், மகளிர் ஆகியோர்தங்கள் அருகிலுள்ள அஞ்சலகம்/வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார். 

News October 29, 2024

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவுரை

image

அதிக ஒலி எழுப்பும் மற்றும் ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கட்டாயம் உடன் இருக்க வேண்டும். மின் வயரிங் இல்லாத திறந்த வெளிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகள் வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை திருவாரூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 29, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

தமிழக முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிவாரணம்

image

கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ஓடாசேரி கிராமத்தில் உள்ள மின்மாற்றிகள் பழுது நீக்கும் பணியை மேற்கொண்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இழப்பீடாக அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.

News October 28, 2024

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (28.10.24 ) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.

News October 28, 2024

திருவாரூரில் முதியவர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை

image

தீபாவளி பண்டிகைக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், இதர ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும், ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டை எண் இணைக்கப் பெறாத பயனாளிகளுக்கு தொடர்புடைய விஏஒ மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!